சர்வதேசத்தில் முதல் கிண்ணத்தை கைப்பற்றுமா பெல்ஜியம்?

Euro 2020

174
theathletic

உலகின் முதல் நிலை அணியான பெல்ஜியம் கால்பந்து அணி, தங்களுடைய முதல் சர்வதேச கிண்ணத்தை நோக்கிய பயணமாக, யூரோ 2020 கால்பந்து தொடரில் களமிறங்கியுள்ளது.

யூரோ வரலாறு

பெல்ஜிய அணியின் மிகச்சிறந்த யூரோ கிண்ண வரலாறு 1980ம் ஆண்டு கிடைக்கப்பெற்றிருந்தது. குறித்த ஆண்டு யூரோ கிண்ணத்தில் மேற்கு ஜேர்மனி அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இத்தாலி புதிய சாதனை; கோல் வித்தியாசத்தில் அடுத்த சுற்றுக்கு சென்ற வேல்ஸ்

இதற்கு முதல் 1972ம் ஆண்டு தமது சொந்த மண்ணில் நடைபெற்ற யூரோ கிண்ண தொடரில் மூன்றாவது இடத்தை பெல்ஜிய அணி பெற்றிருந்தது. எனினும், இறுதியாக 2016ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கிண்ண காலிறுதியில் வேல்ஸ் அணியிடம் 1-3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியிருந்தது. 

பெல்ஜியம் எவ்வாறு தகுதிபெற்றது?

பெல்ஜியம் அணி 2016ம் ஆண்டு யூரோ கிண்ணத்தில் தோல்வியடைந்த சில நாட்களில், பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மார்க் வில்மோட்ஸ் நீக்கப்பட்டார். பின்னர், ஸ்பெயினின் ரொபேர்டோ மார்டினஸ் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட, இவரின் கீழ், பெல்ஜிய அணி சிறந்த பெறுபேறுகளை பெற்று வந்தது.

குறிப்பாக 2018ம் ஆண்டு பிஃபா உலகக் கிண்ண தொடரில், பெல்ஜிய அணி அபரிமிதமான திறமையை வெளிப்படுத்தியிருந்தது. இதில், இங்கிலாந்து அணியை 2-0 என வீழ்த்தி, மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

யூரோ 2020 இற்கான தகுதிகாண் போட்டிகளில், குழு I யில் பங்கேற்ற பெல்ஜிய அணி, குழுநிலையில் தங்களுடைய 10 போட்டிகளிலும் வெற்றியை கண்டது. இத்தாலி அணியை அடுத்து, இவ்வாறான வெற்றிகளை பெல்ஜிய அணி மாத்திரமே பெற்றுக்கொண்டது.

தாக்குதல் வலிமை மற்றும் தற்காப்பு நிலைத்தன்மையை கொண்டிருந்த பெல்ஜிய அணி, மொத்தமாக 40 கோல்களை பெற்றிருந்ததுடன், எதிரணிகளுக்கு 3 கோல்களை மாத்திரமே வழங்கியிருந்தது. இதில், சென் மரினோ மற்றும் சைப்ரஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் முறையே 9-0 மற்றும் 6-1 என மிகப்பெரிய வெற்றிகளை பதிவுசெய்தது.

அதேநேரம், யூரோ கிண்ணத்துக்கு வரும்வரை, நடைபெற்ற அனைத்துவகை போட்டிகளிலும், தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பதிவுசெய்திருந்த பெல்ஜியம், கிரீஸ் அணிக்கு எதிரான போட்டியை மாத்திரம் 1-1 என சமனிலை செய்திருந்தது.

பயிற்றுவிப்பாளர் மற்றும் விளையாடும் விதம்

ரொபேர்டோ மார்டினஸின் தந்திரோபாயமான பயிற்றுவிப்பின் கீழ், தற்போது வலிமைமிக்க அணியாக பெல்ஜிய அணி ஐரோப்பியாவில் வளர்ந்து நிற்கிறது. இதற்கு முதலில் பிரித்தானியாவின் கழகங்களான சுவான்ஸி சிட்டி, வீகன் அத்லடிக் மற்றும் எவர்டன் ஆகிய கழகங்களில் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட போதும், இவரின் தந்திரோபாயம் சிறப்பாக இருந்தது.

ரொபேர்டோ மார்டினஸ், பெல்ஜியம் அணிக்கு திரும்பியதிலிருந்து, அவர்களின் பயன்படுத்தாத திறமையை வெளியில் கொண்டுவந்தார். குறித்த திறமைகளை தந்திரோபாயத்தின் மூலம் எவ்வாறு பின் களம் மற்றும் முன் களத்துக்கு பயன்படுத்துவது என்பதை அறியவைத்தார். 

அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்த ஆஸ்திரியா, டென்மார்க்

இவரின் இந்த செயற்பாடுகள் மூலம் பெல்ஜிய அணி 56 போட்டிகளில் விளையாடி 43 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளதுடன், 4 போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது. அதேநேரம், பிஃபா தரப்படுத்தலில் தங்களுடைய முதல் இடத்தையும் சுமார் 2 வருடங்களாக தக்கவைத்து வருகின்றது.

பலம் மற்றும் பலவீனம்

தற்போதைய உலக கால்பந்தில் மிகவும் பலம் மிக்க முன்கள வீரர்களை கொண்ட அணியாக பெல்ஜியம் உள்ளது. அணியில் உள்ள  ரோமெலு லூகாகு, ஈடன் ஹசார்ட், ட்ரீஸ் மார்டினஸ் மற்றும் கெவின் டி பிரையன் போன்ற வீரர்களுடன் போட்டியிடுவது கடினம். இவர்கள், கழகங்களுக்காக மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி வரும் வீரர்கள். அதே, திறமையை அணிக்காக வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

எனினும், ஈடன் ஹசார்ட் மற்றும் கெவின் டி பிரையன் ஆகியோரின் உபாதைகள் காரணமாக, அவர்களால் முழுமையான திறமையை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதேநேரம், திபாட் கோர்டோயிஸ் கோல் காப்பு மற்றும் பின் களம் சற்று தடுமாற்றத்தை கடந்த காலங்களில் ஏற்படுத்தி வருகின்றது. அதேநேரம், பின் கள வீரர்களான ஜான் வெர்டங்கொன் மற்றும் டொபி ஆல்டர்வீல்ட் ஆகியோர் அனுப வீரர்களாக இருந்தாலும், சில நேரங்களில் வேகத்தில் தடுமாறுகின்றனர். அத்துடன், மத்திய பின் கள வீரர் ஜேசன் டெனயர் தன்னை இதுவரை நிரூபிக்கவில்லை.

பெல்ஜியம் அணியானது, பலம் பொருந்திய அணிகளான பிரான்ஸ் மற்றும் போர்த்துகல் அணிகளை ஒத்ததாக இருந்தாலும், அவர்களின் மேலதிக வீரர்களில் குறைபாடுகள் உள்ளன. காரணம், முன்னணி வீரர்கள் உபாதையடைந்தால், அவர்களுக்கான மாற்று வீரர்களை அவதானிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெல்ஜிய அணி குழுநிலையில், அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, தொடரின் மிகப் பலம் பொருந்திய அணியாக எதிர்பார்க்கப்படுவதுடன், குழு B யில்  காண்பித்த திறமையைப்  போன்றே, இந்த அணி நொக் அவுட் சுற்றிலும் எதிரணிக்கு சவால் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்  

பெல்ஜிய அணியின் நட்சத்திர வீரர் என்ற பெருமயை ஈடன் ஹசார்ட்டிடம் இருந்து, டி பிரையன் எடுத்துக்கொண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது. மென்செஸ்டர் சிட்டி அணிக்காக மிகச்சிறந்த பருவாகலத்தை பெற்றிருந்ததுடன், பிரீமியர் லீக் மற்றும் லீக் கிண்ணம் என்பவற்றை அந்த அணி கைப்பற்றியதுடன், வளர்ந்து வரும் ஐரோப்பிய சம்பியன் லீக் தொடருக்கான இரண்டாவது இடத்தை பெறுவதற்கும் இவர் மிக முக்கிய காரணமாக இருந்தார்.

அத்துடன், தற்போது உலகில் உள்ள முன்னணி மத்திய கள வீரராகவும் டி பிரையன் உள்ளார். அதுமாத்திரமின்றி, 2020-2021ம் ஆண்டுக்கான தொழில்முறை கால்பந்து வீரருக்கான விருதையும் வென்றிருந்தார்.

உபாதையிலிருந்து சரியான நேரத்தில் குணமாகும் பட்சத்தில், பெல்ஜிய அணியின் நட்சத்திர வீரராக இவர் இருப்பார். அத்துடன், வீரர்களை கண்டறியும், பந்துகளை பரிமாற்றும் மற்றும் கோல்களை பெற்றுக்கொள்வது என சிறந்த திறமை இவரிடம் உள்ளது.

ரோமெலு லூகாகு, சீரி ஏ தொடரில் இன்டர் மிலான் கழகத்துக்காக கடந்த பருவகாலத்தில் 24  கோல்களை பெற்றுக்கொடுத்ததுடன், அந்த அணி சம்பியனாகவும் முடிசூடியது. அவரது பணி சதவீதம், நுண்ணறிவு மற்றும் ஏராளமான கோல் அடித்த திறன் ஆகியவை எதிரணிகளை விட, பெல்ஜிய அணிக்கு கூடுதல் விளிம்பை வழங்கும். 

அத்துடன், அணித்தலைவர் ஈடன் ஹசார்ட் மீண்டும் தன்னுடைய போர்மிற்கு திரும்ப வேண்டும் என அணி எதிர்பார்ப்பதுடன், பயிற்றுவிப்பாளரின் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக கடந்த பருவகாலத்தில் ஐரோப்பாவின் முதல் நிலை லீக்குகளில் 110 ட்ரிபில்ஸ்களை நிறைவுசெய்துள்ள ஜெரிமி டொகு யூரோ கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் மற்றுமொரு வீரராக உள்ளார். 

குழாம் 

  • Goalkeepers – Thibaut Courtois (Real Madrid), Simon Mignolet (Club Brugge), Mats Selz (RC Strasbourg Alsace) 
  • Defenders – Toby Alderweireld (Tottenham), Dedryck Boyata (Hertha Berlin), Jason Denayer (Lyon), Thomas Vermaelen (Vissel Kobe), Jan Vertonghen (Benfica) 
  • Midfielders – Timothy Castagne (Leicester), Nacer Chadli (Istanbul Başakşehir), Yannick Carrasco (Atlético Madrid), Kevin De Bruyne (Manchester City), Leander Dendoncker (Wolves), Thorgan Hazard (Borussia Dortmund), Thomas Meunier (Borussia Dortmund), Dennis Praet (Leicester), Youri Tielemans (Leicester), Hans Vanaken (Club Brugge), Axel Witsel (Borussia Dortmund) 
  • Forwards – Michy Batshuayi (Crystal Palace), Christian Benteke (Crystal Palace), Jérémy Doku (Rennes), Eden Hazard (Real Madrid), Romelu Lukaku (Inter Milan), Dries Mertens (Napoli), Leandro Trossard (Brighton)

>>மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க<<