யங் ஸ்டார் அணியை வீழ்த்திய சிவானந்த விளையாட்டுக் கழகம்

117
EPCA - Division II 2020

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண டிவிஷன் – II கழகங்கள் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (15) நிறைவுக்கு வந்த போட்டியொன்றில், ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினை மட்டக்களப்பின் சிவானந்தா விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது. 

சிவானந்த கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, யங் ஸ்டார் கிரிக்கெட் கழகத்தினர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். 

ஹிமிதுராவ ஈகிள்ஸ் அணியிடம் வீழ்ந்த சிவானந்த

கிழக்கு மாகாண அணிகள் இடையே நடைபெற்றுவரும் டிவிஷன் – II ஒருநாள் கிரிக்கெட்

இதன்படி, முதலில் துடுப்பாடிய யங் ஸ்டார் அணியானது 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 177 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது. 

யங் ஸ்டார் அணியின் துடுப்பாட்டம் சார்பாக நப்ரிஸ் 46 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, ரியாஸ் 36 ஓட்டங்களைப் பெற்றார். 

சிவானந்தா அணியின் பந்துவீச்சு சார்பில் தவகீஷன் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஜெஹன் 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார். 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 178 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய சிவானந்த அணியினர் தமது பதில் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தனர். 

தொடர்ந்து, துடுப்பாட்டத்தை தொடங்கிய சிவானந்தா அணிக்கு ஜெனிசியஸ் அரைச்சதம் பெற்று உதவியிருந்தார். இந்த அரைச்சதத்தின் உதவியோடு, சிவானந்தா வீரர்கள் போட்டியின் வெற்றி இலக்கினை 43.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 181 ஓட்டங்களுடன் அடைந்தனர். 

சிவானந்த அணியின் வெற்றிக்கு உதவியிருந்த ஜெனிசியஸ் தனது அரைச்சதத்துடன் 67 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, கிஹேந்திரன் 33 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பு வெற்றியை உறுதி செய்திருந்தார்.

அதேநேரம், யங் ஸ்டார் அணியின் பந்துவீச்சு சார்பில் றிப்னாஸ் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்து சிறப்பாக செயற்பட்ட போதிலும் குறித்த பந்துவீச்சு வீணாகியிருந்தது. 

போட்டியின் சுருக்கம்

யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – 177 (48.3) – நப்ரிஸ் 46, ரியாஸ் 36, தவகீஷன் 3/18, ஜெஹன் 2/25

சிவானந்தா விளையாட்டுக் கழகம் – 181/6 (43.4) – ஜெனிசியஸ் 67, கிஹேந்திரன் 33, றிப்னாஸ் 2/44

 

முடிவு – சிவானந்தா விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க