ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடவுள்ள சகீப்!

Afghanistan tour of Bangladesh 2023

73

பங்களாதேஷ் அணியின் முன்னணி சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின்போது சகீப் அல் ஹசனின் ஆள்காட்டி விரலில் உபாதை ஏற்பட்டிருந்தது

மீண்டும் நைட் ரைடர்ஸ் அணிக்குத் திரும்பும் பிராவோ

இந்த உபாதை காரணமாக சகீப் அல் ஹசன் ஆறு வாரங்கள் ஒய்வில் இருக்க வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் வைத்தியக்குழு அறிவித்திருந்தது. இதன் காரணமாக ஜூன் 14ம் திகதி ஆரம்பமாகும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் விளையாட மாட்டார்.

எவ்வாறாயினும் டெஸ்ட் தொடரையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகளுக்காக இந்தியாவுக்கு செல்லவுள்ளது. குறித்த தொடரை முடித்துக்கொண்டு ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்காக மீண்டும் பங்களாதேஷ் வரவுள்ளது. இந்த தொடர் ஜூலை முதலாம் திகதி ஆரம்பிக்கிறது.

எனவே குறித்த காலப்பகுதிக்குள் சகீப் அல் ஹசன் உபாதையிலிருந்து குணமடைந்து போட்டித் தொடருக்கு தயாராகிவிடுவார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்வாளர் மின்ஹாஜுல் அபீதின் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் மற்றும் 2 T20I போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை முதலாம் திகதி முதல் 17ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<