ஹிமிதுராவ ஈகிள்ஸ் அணியிடம் வீழ்ந்த சிவானந்த

101

கிழக்கு மாகாண அணிகள் இடையே நடைபெற்றுவரும் டிவிஷன் – II ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்று முடிந்த போட்டியொன்றில் மட்டக்களப்பு சிவானந்த விளையாட்டுக் கழகத்தினை, அம்பாறையின் ஹிமிதுராவ ஈகிள்ஸ் கழகம் 93 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. 

நிப்ராஸ், இஹ்கான், அஸார்தீன் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு யங் ஹீரோஸ் வெற்றி

கிழக்கு மாகாண டிவிஷன் – II கிரிக்கெட் கழகங்கள் இடையே நடைபெறும் ஒருநாள்……..

சிவானந்த கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிவானந்த கழக அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை விருந்தினர்களான ஹிமிதுராவ கிரிக்கெட் கழகத்திற்கு வழங்கியிருந்தனர். 

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹிமிதுராவ கிரிக்கெட் கழக அணியினர் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 226 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். 

ஹிமிதுராவ கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த M. பிரேமரத்ன 63 பந்துகளுக்கு 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம், W. பிரேமரத்ன அரைச்சதம் தாண்டி 53 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

மறுமுனையில் சிவானந்த கிரிக்கெட் கழக அணியின் பந்துவீச்சு சார்பில் ஸ்ரீலக்ஷன் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்க்க, சாத்வீகன் 3 விக்கெட்டுக்களை சுருட்டினர்.  

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 227 ஓட்டங்களை அடைய சிவானந்த கிரிக்கெட் கழக அணி, தமது பதில் துடுப்பாட்டத்தினைத் தொடங்கியது. 

Photos: Intra Provincial Cricket Tournament 2019 – Division II | Himidurawa Eagle SC Vs Batticaloa Sivananda SC

ThePapare.com | Mohamed Alishiyam| 09/02/2020 ………

தொடர்ந்து, சிவானந்த வீரர்கள் ஹிமிதுராவ கிரிக்கெட் கழக அணியின் பந்துவீச்சினை எதிர்கொள்ளத் தடுமாறி 30.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 133 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வியடைந்தனர்.

சிவானந்த கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில், விதுஷன் 43 ஓட்டங்கள் பெற்று போராட்டம் காண்பித்த போதிலும் அது வீணாகியது. அதேநேரம், திலகரட்ன 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும், பிரேமரத்ன 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் ஹிமிதுராவ தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஹிமிதுராவ கிரிக்கெட் கழகம் – 226 (43.5) M. பிரேமரத்ன 60, W. பிரேமரத்ன 53, ஸ்ரீலக்ஷன் 33/4, சாத்வீகன் 73/4

சிவானந்த கிரிக்கெட் கழகம் – 133 (30.3) விதுஷன் 43, திலகரட்ன 25/4, M. பிரேமரத்ன 19/3

முடிவு – ஹிமிதுராவ கிரிக்கெட் கழகம் 93 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<