இங்கிலாந்து – தென்னாபிரிக்க மோதும் ஒருநாள், T20 தொடர் நவம்பரில்

102
England's white-ball tour of South Africa

தென்னாபிரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியதனை அடுத்து, அந்த நாட்டு மண்ணில் தென்னாபிரிக்க – இங்கிலாந்து அணிகள் பங்குபெறும் ஒருநாள், T20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் நவம்பர் மாத இறுதிப் பகுதியில் நடைபெறவிருக்கின்றன. 

>> அஹமதாபாதில் இந்தியா – இங்கிலாந்து பகலிரவு டெஸ்ட்: பிசிசிஐ

அதன்படி, நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த கிரிக்கெட் தொடர்களில் மூன்று T20 போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன.

அதேநேரம், இந்த கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நவம்பர் 16ஆம் திகதி விஷேட விமானம் ஒன்றின் மூலம் தென்னாபிரிக்க மண்ணை நோக்கி பயணமாகின்றது. 

இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்கள் கொவிட்-19 வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக கேப் டவுன் மற்றும் பார்ள் ஆகிய இடங்களில் இருக்கும் இரண்டு மைதானங்களில் மாத்திரம் நடைபெறவிருப்பதோடு, போட்டிகளின் போது பார்வையாளர்கள் மைதானம் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.  

அதேநேரம், இந்த கிரிக்கெட் தொடர்களுக்காக தென்னாபிரிக்கா வரவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களது அணி வீரர்கள் பங்குபெறும் பயிற்சி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவிருக்கின்றன. 

இந்த பயிற்சிப் போட்டிகளை அடுத்து இரண்டு அணிகளும் பங்குபெறுகின்ற மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாக, இரண்டு அணிகளும் பங்குபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. 

>> சென்னை அணியிலிருந்து வெளியேறும் பிராவோ!

மறுமுனையில் தென்னாபிரிக்க – இங்கிலாந்து அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரினை நடாத்துவதன் மூலம், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கொவிட்-19 வைரஸ் காரணமாக தமக்கு ஏற்பட்ட மிகப் பெரிய நிதி நெருக்கடி ஒன்றில் இருந்து பாதுகாக்கப்படவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

அதேவேளை, தென்னாபிரிக்க அணி இங்கிலாந்து அணியுடனான தொடரில் விளையாடியதன் பின்னர் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தொடர் அட்டவணை

  • நவம்பர் 21 – ஒருநாள் பயிற்சிப் போட்டி, கேப் டவுன்
  • நவம்பர் 23 – இரண்டு T20 பயிற்சிப் போட்டிகள், பார்ள்
  • நவம்பர் 27 – முதல் T20 போட்டி, பார்ள்
  • நவம்பர் 29 – இரண்டாவது T20 போட்டி, பார்ள்
  • டிசம்பர் 1 – மூன்றாவது T20 போட்டி, கேப் டவுன்
  • டிசம்பர் 4 – முதல் ஒருநாள் போட்டி, கேப் டவுன்
  • டிசம்பர் 6 – இரண்டாவது ஒருநாள் போட்டி, பார்ள்
  • டிசம்பர் 9 – மூன்றாவது ஒருநாள் போட்டி, கேப் டவுன்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<