அஹமதாபாதில் இந்தியா – இங்கிலாந்து பகலிரவு டெஸ்ட்: பிசிசிஐ

220

இந்தியா – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக, அஹமதாபாத்தில் உள்ள மொடேரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் விளையாட உள்ளது.

 >>இடைநடுவில் IPL தொடரை தவறவிட்ட முன்னணி வீரர்கள்

இந்த தொடரில் ஒரு டெஸ்ட் பகல்இரவு ஆட்டமாக நடத்தப்படும் (Pink Ball Test) என்றும், அந்த டெஸ்ட் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்

இதுதொடர்பில் சவுரவ் கங்குலி கருத்து தெரிவிக்கையில், இங்கிலாந்து தொடரை எப்படி எந்தெந்த மைதானங்களில் நடத்துவது என்பதில் சில திட்டங்களை வைத்துள்ளோம். ஆனால், போட்டிக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு எதையும் இறுதி செய்யவில்லை.  

.பி.எல். முடிந்ததும் இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளது. அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஓரிரு நாட்களில் தேர்வு செய்யப்படும்

.பி.எல் தொடருக்குப் பிறக்கு உடனடியாக டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எமது வீரர்களுக்கு பிரச்சினையாக இருக்காது. அவர்கள் அனுபவமும், தகுதியும் வாய்ந்த வீரர்கள்.

இந்திய கிரிக்கெட் சபையின் வருடாந்த பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அப்போது ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரை எப்போது தொடங்குவது என்பது தொடர்பில் முடிவு செய்யப்படும்” என்று கங்குலி தெரிவித்தார்.

>>Video – LPL ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்..! முழுமையான பார்வை | Sports Round-up – Epi 136

இதன்மூலம் இந்தியாவில் 2ஆவது முறையாக பகல் – இரவு டெஸ்ட் நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் இடையே கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

எதுஎவ்வாறாயினும், கொரோனா சூழலிலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. அந்தத் தொடர் அஹமதாபாத், தரம்சாலா மற்றும் கொல்கத்தாவில் நடைபெறலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<