ஹம்பாந்தோட்டை மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்த தீர்மானம்

0

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் நடத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும, எதிர்வருகின்ற காலங்களில் அதிகளவு சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

அதற்கான ஆரம்பமாக எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டிகளும் அமையும் என குறிப்பிட்டார். 

சுகததாச விளையாட்டரங்கை முற்றுகையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்

நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய ……….

ஹம்பாந்தோட்டை கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு ஏன் வழங்குவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி நேற்று (05) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் போதே விளையாட்டுத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தின் தரத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது. சர்வதேசப் போட்டிகளை நடத்தக்கூடிய மைதானமாகவே உள்ளது. அதேபோல பல சர்வதேச போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் பாகிஸ்தான், கனடா உள்ளிட்ட அணிகள் விளையாடியுள்ளன. ஆகவே இந்த மைதானத்தில் நிறைய போட்டிகளை நடத்தலாம். 

கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் அப்போதைய அரசாங்கத்தினால் இந்த மைதானத்தில் சர்வதேசப் போட்டிகளை நடத்தக்கூடாது என எடுத்த தீர்மானமே பிரச்சினையாக அமைந்ததுடன், எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் நடத்தப்படவில்லை. 

கடந்த 2017.01.01 ஆம் திகதி முதல் 2017.05.31 ஆம் திகதி வரையான 5 மாதங்களில் 13 உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக 95,200 ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது. 

எனினும், சர்வதேசப் போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்தாமல் இருப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் கவலையளிக்கிறது. 

அதேபோன்று இந்த மைதானத்திலும் நாட்டிலுள்ள ஏனைய மைதானங்களைப் போல சர்வதேசப் போட்டிகளை நடத்த முடியும்.

எனவே எதிர்வரும் காலங்களில் இந்த மைதானத்தில் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான திட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம் என்றார்.

இதேநேரம், இந்த மைதானத்தில் 13 பேர் ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். மாதாந்தம் 40 ஆயிரம் நீர் கட்டணம் செலுத்தி வருகின்றோம். 

அத்துடன், மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரங்கின் ஒரு பகுதி தான் திருமண வைபவங்களுக்காக வழங்கப்படுகின்றது. 

கெரோனா வைரஸினால் தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் ஒத்திவைப்பு

சீனா முழுவதும் வேகமாக பரவி வருகின்ற ………..

இந்த நிலையில், சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்திற்கு அருகாமையில் வீரர்களுக்கு தங்குமிட வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நட்சத்திர ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்திற்கு அருகாமையில் நட்சத்திர ஹோட்டலொன்று நிர்மாணிப்பது விளையாட்டுத்துறை அமைச்சுக்கு உட்பட்ட விடயமல்ல. ஆனால் அதற்குப் பதிலாக ஷெங்ரிலா நட்சத்திர ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, மைதானத்துக்கு அருகாமையில் ஹோட்டலொன்றை நிர்மாணிப்பதற்கு கடந்த அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது என தெரிவித்தார்.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<