IPL இல் பும்ராவின் புதிய சாதனை

223
BCCI

டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று (05) நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரிட் பும்ரா, அதிக விக்கெட்டுக்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றார்.

அத்துடன், ஒரு .பி.எல் பருவத்தில் அதிக விக்கெட்டுக்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

டுபாயில் நேற்று நடைபெற்ற .பி.எல் போட்டியின் முதலாவது தகுதிச்சுற்றுப் (குவாலிபயர் 1) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணியை வீழ்த்தி ஆறாவது தடவையாக .பி.எல் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது

2020 ஐ.பி.எல் Play Off இல் களமிறங்கும் இலங்கை வீரர்கள்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களை எடுத்தது. பதிலெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் அதிரடி காட்டிய மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா நான்கு ஓவர்களில் 14 ஓட்டங்கள் மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்

இதன்மூலம் இந்த வருட .பி.எல் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் (27 விக்கெட்) எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் ஒரு .பி.எல்ருவத்தில்அதிக விக்கெட்டுக்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார். 2017இல் புவனேஸ்வர் குமார் 26 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது பும்ரா முறியடித்துள்ளார்

Video – சுழல் நாயகன் வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்..!

எதுஎவ்வாறாயினும், இம்முறை .பி.எல் தொடரின் ஆரம்பத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீசவில்லை. ஓட்டங்களை வாரி வழங்கினார். முக்கிய போட்டிகளில் விக்கெட் வீழ்த்தவில்லை.  

கொரோனா வைரஸ் காலப்பகுதியில் கிடைத்த ஓய்வால் அவர் போர்ம் இழந்து விட்டார் என பலரும் குறை  கூறியிருந்தனர். எனினும், தற்போது அவர் அந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்து மிரள வைத்துள்ளார்.

ஒரு .பி.எல் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் 

பும்ரா – 27 (2020)  

புவனேஸ்வர் குமார் – 26 (2017)

ஹர்பஜன் சிங் – 24 (2013)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<