7 வருடங்களுக்கு பின்னர் பங்களாதேஷ் செல்லும் இங்கிலாந்து

England tour of Bangladesh 2023

233

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.

மொத்தமாக 6 போட்டிகள் கொண்ட இந்த தொடரானது அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL வரலாற்றில் கோடிகளை அள்ளிய வீரர்கள்!

அதன்படி முதலில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் முதல் போட்டி மார்ச் முதலாம் திகதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 3ம் திகதியும் நடைபெறவுள்ளன. மூன்றாவது ஒருநாள் போட்டியானது சட்டகிரொமில் மார்ச் 6ம் திகதி நடைபெறவுள்ளன.

ஒருநாள் தொடரையடுத்து T20I தொடரானது மார்ச் 9, 12 மற்றும் 14ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இதில் முதல் போட்டியானது சட்டகிரோமில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த இரண்டு T20I போட்டிகள் டாக்காவில் நடைபெறவுள்ளது. இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளை பொருத்தவரை முதன்முறையாக இருதரப்பு T20I தொடரில் விளையாடவுள்ளன.

இறுதியாக இங்கிலாந்து அணி 2016ம் ஆண்டு பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வெற்றிக்கொண்டது. தற்போது 7 வருடங்களுக்கு பின்னர் மீண்டும்  பங்களாதேஷிற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<