மகளிர் கிரிக்கெட் அபிவிருத்திக்காக சுசந்திகா ஜயசிங்க நியமனம்

222

ஒலிம்பிக்கில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த தடகள வீராங்கணையான சுசந்திகா ஜயசிங்க மகளிர் கிரிக்கெட்டினை விருத்தி செய்யும் நோக்குடன், மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி வழிகாட்டி ஆலோசகராக (Consultant—Mentoring and Development of Women’s Cricket) இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>> ரெய்னா – கோஹ்லியின் சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்

அந்தவகையில் இலங்கைக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கணையாகவும், ஒலிம்பிக் ஓட்ட நிகழ்ச்சிகளில் (Sprint) பதக்கம் வென்ற ஒரே ஆசிய  வீராங்கணையாகவும் இருக்கும் சுசந்திகா ஜயசிங்க, தனக்கு புதிதாக வழங்கப்பட்டிருக்கும் பதவி மூலம் இலங்கையின் மகளிர் கிரிக்கெட் விளையாட்டினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் தனது புதிய பதவி குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சுசந்திகா ஜயசிங்க தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சவால் குறித்து சந்தோஷமடைவதாக தெரிவித்திருந்ததோடு, கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டும் இளம் வீராங்கனைகளுக்கு உதவுவதற்கான வாய்ப்பு ஒன்று கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் இலங்கை கிரிக்கெட் சபையும் சுதந்திகா ஜயசிங்கவின் புதிய பதவி மீது நம்பிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்டிருப்பதோடு, அவரின் பதவிக்காலம் பெப்ரவி 01, 2023 இல் ஆரம்பமாவதாகவும் கூறியிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<