இங்கிலாந்து, ஆஸி வீரர்களுக்கு 36 மணி நேரம் சுய தனிமைப்படுத்தல்

128
England and Australia

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் 21 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தை நேற்று (17) வந்தடைந்தனர். 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் .பி.எல் நாளை (19) ஆரம்பமாகவுள்ளது. இதற்காக 8 அணிகளையும் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் கடந்த மாதம் 21ஆம் திகதி, 22ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மூன்று இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்

அங்குள்ள கொவிட் 19 பாதுகாப்பு வழிகாட்டல் நெறிமுறைகளின் படி அனைவரும் ஆறு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு மூன்று தடவைகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்

>> இங்கிலாந்து – அவுஸ்திரேலிய ஒருநாள் தொடர் மூலம் அதிக வீரர்கள் முதல் பத்திற்குள் நுழைவு

இந்த நிலையில், கடந்த 10ஆம் திகதி நிறைவுக்கு வந்த கரீபியன் ப்ரிமீயர் லீக்கில் விளையாடிய டுவையின் பிராவோ, கிரென் பொல்லார்ட், அண்ட்ரூ ரஸல், ஷீட் கான், இம்ரான் தாஹிர் உட்பட ஐ.பி.எல் தொடரில் இடம்பிடித்துள்ள வீரர்கலும் டுபாயை வந்தடைந்தனர்.

இதனிடையே, நேற்றுமுன்தினம் (16) அவுஸ்திரேலியாஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்தது

இந்தத் தொடர் முடிந்த கையோடு .பி.எல் தொடரில் இடம்பிடித்துள்ள இரண்டு அணிகளையும் சேர்ந்த 21 வீரர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தை வந்தடைந்தனர்

இதன்படி, ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், ஜொப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் போன்ற வீரர்கள் வியாழக்கிழமை இரவு லண்டனில் இருந்து டுபாயை வந்தடைந்தனர். அப்போது அவர்களுக்கு PCR பரிசோதனை கொள்ளப்பட்டது. மேலும், PCR பரிசோதனை செய்து கொண்ட பின்புதான் இங்கிலாந்தில் இருந்து வீரர்கள் புறப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

>> Video – கொரோனாவினால் மீண்டும் தள்ளிப் போகும் பங்களாதேஷ் தொடர்? |Sports RoundUp – Epi 132

இது குறித்து, பிசிசிஐ இன் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்

”மருத்துவப் பாதுகாப்பு விதிமுறைகள் உரிய முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. வீரர்கள் டுபாய் வந்ததும் மீண்டும் PCR பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள்” என தெரிவித்தார்

”இதன்மூலம், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் எந்த போட்டியையும் தவறவிட வாய்ப்பில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்

முன்னதாக டுபாய் வரும் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் கட்டாயமாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.   

>> சென்னை வீரர் ருதுராஜ் IPL போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல்?

இதனால் முதலாவது வாரத்தில் நடைபெறவுள்ள லீக் போட்டிகளில் அந்த வீரர்களுக்கு கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே அவர்கள் இங்கிலாந்தில் உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதால் தனிமைப்படுத்தலை மூன்று நாட்களாக குறைக்க வேண்டும் என இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் பிசிசிஐயிடம் லியுறுத்தியது.  

இதன்படி, டுபாய் வந்த இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு 36 மணித்தியலங்கள் மாத்திரம் சுய தனிமைப்படுத்தல் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால், டுபாயை வந்தடைந்த இருநாட்டு வீரர்களும் 36 மணித்தியாலங்களுக்குப் பிறகு நேரடியாக அணியுடன் இணைந்து கொள்வார்கள் எனவும், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு லீக் போட்டிகளில் விளையாடுவார்கள் எனவும் .பி.எல் நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

>> Video – 10,000 கோடி நஷ்டத்திலிருந்து தப்பித்த BCCI | Cricket Galatta Epi 35

எனவே, தற்போது இந்த தளர்வுகளால், நான்கு அணிகள் பயன்பெறும் என்று கூறப்படுகிறது. முதல் லீக் போட்டியில் பங்கேற்கும் சென்னை அணி (ஹசில்வுட், டொம் கரன்), ராஜஸ்தான் ரோயல்ஸ் (ஸ்மித், பட்லர், ஆர்ச்சர்), பஞ்சாப் அணி (கிளென் மெக்ஸ்வெல்) மற்றும் டெல்லி அணி (அலெக் கேரி) ஆகிய அணிகள் தற்போது நிம்மதியடைந்துள்ளதாக தெரிகிறது.

மறுபுறத்தில் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தாலும், செப்டம்ர் 23ஆம் திகதி முதல் லீக் விளையாடும் கொல்கத்தா அணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என்று கூறப்படுகிறது. இயென் மோர்கன், டொம் பென்டன் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் கொல்கத்தா அணியில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<