அவுஸ்திரேலியாவை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது பாகிஸ்தான்

315

ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு T-20 தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணியினர், அவர்களது அதிகூடிய T-20 வெற்றி இலக்கினை அடைந்து வெற்றியைப் பெற்று கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டனர்.

பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு இறுதிவரை ஆட்டம் காட்டிய ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று (06) ஹராரே சர்வதேச..

பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய இந்த முத்தரப்பு T-20 தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே இரண்டு தடவைகள் மோதியிருந்தன. அதன் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுகளால் வெற்றிபெற்றிருந்தது. தங்களது அடுத்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு தக்க பதிலடியை கொடுத்து பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளும் தங்களுக்குள்ளான போட்டிகளில் ஒன்றுக்கு ஒன்று என சமனிலைப்படுத்தியிருந்த போதும், தொடரை நடத்திய ஜிம்பாப்வே அணியை இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று, தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தன. இதனால் இறுதிப் போட்டியில் யார் பலசாளி? என்பதை நிரூபிக்கும் வகையில் இரண்டு அணிகளும் களமிறங்கின.

ஜிம்பாப்வே அணி இறுதிப் போட்டியிலிருந்து வெளியேறியிருந்த நிலையில், குறைந்த அளவிலான ரசிகர்கள் கூட்டத்துக்கு முன்னால் கிண்ணத்துக்காக மோதிக்கொண்ட இந்த போட்டியின் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று, களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இரண்டு அணிகளிலும் பெரிதான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஆர்சி ஷோர்ட் மீண்டும் களமிறங்கிய நிலையில், பாகிஸ்தான் அணி தங்களது முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலியை அணியில் இணைத்துக்கொண்டது. பலமான வேகப்பந்து வீச்சை அவுஸ்திரேலியா சமாளிக்குமா? என்ற கேள்வி எழுந்திருந்த போதிலும், ஆரோன் பின்ச்சின் அதிரடி மற்றும் மெக்ஸ்வேல், டிராவிஷ் ஹெட் ஆகியோரின் மத்திய வரிசை நம்பிக்கை என்பதை கையில் கொண்டு அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது.

அம்லா, டு ப்ளேசிஸ் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தோடு பயிற்சி போட்டி நிறைவு

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட்…

அவுஸ்திரேலிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை போலவே, அவர்களது ஆரம்பம் மிக துள்ளியமான ஆரம்பமாக இருந்தது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்த ஆர்சி ஷோர்ட் மற்றும் பின்ச் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 95 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்நிலையில் 27 பந்துகளுக்கு 47 ஓட்டங்களை விளாசியிருந்த அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச்சின் விக்கெட்டை சதாப் கான் வீழ்த்தினார். இதனால் சற்று சரிவுப்பாதையை நோக்கிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆர்சி ஷோ்ட் நம்பிக்கை அளித்தார். பின்ச்சின் விக்கெட் பறிபோனாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பில் ஷோர்ட் ஓட்டங்களை குவித்தார்.

எனினும், அடுத்துவந்த மெக்ஸ்வேல் மீண்டும் ஏமாற்றமளித்து 5 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப, அவருக்கு பதிலாக களமிறங்கிய மார்க் ஸ்டொய்னிஸ் 12 ஓட்டங்களுடன் மொஹமட் ஆமீரின் பந்து வீச்சில் வெளியேறினார். எனினும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் அரைச் சதத்தை நெருங்கிய டிராவிஷ் ஹெட் அணிக்கு வலுவளிப்பார் என எதிர்பார்த்த போதிலும் 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில் அவரும் வெளியேறினார். மீண்டும் அவுஸ்திரேலிய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டம் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அலெக்ஷ் கெரி 2 ஓட்டங்கள், ஆகர் 7 ஓட்டங்கள் மற்றும் டை ஓட்டங்கள் இன்றி தொடர்ச்சியாக வெளியேறினர்.

எனினும், அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதற்காக போராடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆர்சி ஷோர்ட் 53 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட எண்ணிக்கை 20 ஓவர்களில் 183 ஆக உயர்ந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் வேகத்தில் எதிரணியை மிரட்டிய மொஹமட் ஆமீர் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், இளம் சஹீன் அப்ரிடி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

ஹேல்ஸின் அதிரடியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து

அலெக்ஸ் ஹேல்ஸின் அரைச் சததத்தின் உதவியுடன் இந்திய…

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, சவால் விடுக்கக்கூடிய வேகப்பந்து வீச்சுக்கு முன், கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.  பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் மிகவும் மோசமாக அமைந்தது.  2 ஓட்டங்களை பெற்றிருந்த போது முதல் இரண்டு விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிக்கப்பட, பாகிஸ்தான் அணிக்கு அவுஸ்திரேலிய அணியால் பெரும் சவால் கொண்டு வரப்பட்டது. ஷயிப்ஷடா பர்ஹான் மற்றும் ஹுசைன் டலாத் ஆகியோர் ஓட்டங்கள் இன்றி அரங்கு திரும்பினர்.

எனினும், பாகிஸ்தான் அணி சார்பில் வேகமாக துடுப்பெடுத்தாடக்கூடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பக்ஹர் ஷமான் மற்றும் அணித்தலைவர் சப்ர்ராஸ் அஹமட் ஆகியோர் இணைந்து ஓரளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக ஓட்டங்களை குவித்தனர்.  இருவரும் 45 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த நிலையில், சர்ப்ராஸ் அஹமட் 28 ஓட்டங்களுடன் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

அவர் வெளியேற, சொஹைப் மலிக், பக்ஹர் ஷமானுடன் இணைந்து அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்.  ஒரு பக்கம் மலிக் அதிரடியை வெளிப்படுத்த பக்ஹர் ஷமான் தன்னுடைய பாணியில் வேகமாக ஓட்டங்களை குவித்தார். இருவரும் 63 பந்துகளை எதிர்கொண்டு 107 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுக்க பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை நெருங்கியது.

இதன்போது 91 ஓட்டங்களை பெற்றிருந்த பக்ஹர் ஷமான் கன்னி சதத்தை தவறவிட்டு ரிச்சட்சனின் பந்து வீச்சு மூலமாக வெளியேறினார். இவர் 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகளை விளாசியிருந்தார்.

தொடர்ந்து தனது அனுபவத்தையும், அதிரடியையும் போட்டிக்குள் புகுத்திய சொஹைப் மலிக், அஷிப் அலியுடன் இணைந்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். சொஹைப் மலிக் 37 பந்துகளில் 43 ஓட்டங்களையும், அஷிப் அலி 11 பந்துகளுக்கு 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்த நிலையில், 19.2 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இங்கிலாந்தில் கலக்கப்போகும் திஸர பெரேரா

இங்கிலாந்து உள்ளூர் கழகமான க்ளொஸ்டர்ஷெயார்..

இந்த வெற்றியிலக்கை கடந்த பாகிஸ்தான் அணி T-20 போட்டிகளில் தங்களது புதிய மைல்கல் ஒன்றையும் எட்டியுள்ளது. ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் பாகிஸ்தான் அணி T-20 போட்டிகளில் தங்களது அதிகூடிய வெற்றியிலக்கினை கடந்துள்ளது. இதற்கு முன்னர் இலங்கையின் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கெதிரான T-20 போட்டியில் 178 ஓட்டங்களை பெற்றிருந்தமையே பாகிஸ்தான் அணி பெற்ற அதிகூடிய வெற்றி இலக்காக பதிவாகியிருந்தது. தற்போது இந்த சாதனையை கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி புதுப்பித்துள்ளது.

பாகிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்ற போதிலும், T-20 போட்டிகளை பொருத்தவரையில் அசைக்க முடியாத அணியாக வலம் வருகின்றது. எனினும் தங்களது பந்தை சேதப்படுத்திய கரையில் இருந்து மீண்டு வரும் அவுஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து அணியுடனான தோல்விக்கு பின்னர் கிடைத்த மற்றுமொரு தோல்வியாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகன் விருது – பக்ஹர் ஷமான்
தொடர் ஆட்டநாயகன் விருது – பக்ஹர் ஷமான்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<