கெல்லியின் சதத்தோடு ஸாஹிராவை வீழ்த்திய புனித ஜோசப் கல்லூரி

133

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் (12) இரண்டு போட்டிகள் நிறைவடைந்ததோடு ஒரு போட்டி ஆரம்பமாகியிருந்தது.

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

மருதானையின் இரண்டு முக்கியமான பாடசாலைகளுக்கு இடையிலான இப்போட்டி நேற்று (11) ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

ரெவான் கெல்லி சதம் கடந்து 125 ஓட்டங்களைப் பெற புனித ஜோசப் கல்லூரி முதலாவது இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. எனினும் ஸாஹிரா கல்லூரி முதல் இன்னிங்சில் 160 ஓட்டங்களையே பெற்றிருந்தது. ஸாஹிராவின் பந்துவீச்சில் மொஹமட் ஷக்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

குருகுல கல்லூரிக்கு வெற்றி தேடித்தந்த சமித்தின் பந்துவீச்சு

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருந்த ஸாஹிரா கல்லூரி 174 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துக் கொண்டது. இதில் புனித ஜோசப் கல்லூரி சார்பாக நிப்புன் சுமணசிங்க 5 விக்கெட்டுகளை சுருட்டியிருந்தார்.

ஸாஹிரா கல்லூரியின் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 86 ஓட்டங்களை 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து புனித ஜோசப் கல்லூரி கடந்தது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 160 (37) – மொஹமட் சகில் 43, மொஹமட் ஷஹதுல்லாஹ் 42, துனித் வெல்லகே 4/47, அஷேன் டேனியல் 3/46, லக்ஷான் கமகே 2/52

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 249 (59.2) ரெவான் கெல்லி 125, மொஹமட் ஷக்கி 4/63, மொஹமட் ஆதில் 3/35

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 174 (61.2) – தில்ஷார சமிந்த 48, மொஹமட் ரிபாத் 31, நிப்புன் சுமணசிங்க 5/42

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 89/4 (12.4)

முடிவு – புனித ஜோசப் கல்லூரி 6 விக்கெட்டுகளால் வெற்றி


டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

பண்டாரகம மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மாத்தறை தோமியர் கல்லூரி வெறும் 117 ஓட்டங்களையே பெற்றிருந்தது. பந்துவீச்சில் மெதுசன் குமார 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை டி.எஸ் சேனநாயக்க கல்லூரி சார்பாக பதம்பார்த்திருந்தார்.

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி முதல் இன்னிங்சில் 225 ஓட்டங்கள் பெற்றமையினால் பலோவ் ஒன் (Follow on) முறையில் மீண்டும் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி தமது இரண்டாவது இன்னிங்சுக்காக லஹிரு தில்ஷான் ஆட்டமிழக்காது பெற்ற அரைச்சதத்துடன் (88*) 232 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இல்லை

பந்து வீச்சில் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி சார்பாக மெதுசன் குமார மற்றும் முதித லக்ஷான் தலா 4 விக்கெட்டுகளை பங்கிட்டிருந்தனர்.

தொடர்ந்து  இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைய போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்)  – 225 (57.2) – டெரோன் பாஸ்கரன் 41, அபிஷேக் லியனாரச்சி 39, சமத் யட்டவர 32, கவிந்து ரித்மல் 3/45, லஹிரு தில்ஷான் 2/45

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 117 (46.1) – மிஹிசால் அமோத 42, பசிந்து ஆதித்ய 3/19, மெதுசான் குமார 4/33

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (இரண்டாம் இன்னிங்ஸ்) (f/o) – 232/9d (76) – லஹிரு தில்ஷான் 88*, தருஷ கவிந்த 79, மெதுசான் குமார 4/45, முதித லக்ஷான் 4/64

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ் – 40/4 (7)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (டி.எஸ் சேனநாயக்க கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ எதிர் புனித மரியார் கல்லூரி, கேகாலை

மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி தேவக பீரிஸ் மற்றும் வினுஜ ரன்புல் ஆகியோரின் அரைச்சதங்களுடன் 177 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற்றிருந்தது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த கேகாலை புனித மரியார் கல்லூரி அணியினர் 75 ஓட்டங்களுடன் சுருண்டு கொண்டனர்.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி சார்பாக நதுக்க பெர்னாந்து 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மோசமான துடுப்பாட்டத்தை முதல் இன்னிங்சில் வெளிக்காட்டியமையினால் மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த மரியார் கல்லூரி முதல் நாள் நிறைவில் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து மீண்டும் தடுமாறியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 177 (48) – வினுஜ ரன்புல் 60, தேவக பீரிஸ் 51, அகலங்க பெத்தியகொட 3/27

புனித மரியார் கல்லூரி, கேகாலை (முதல் இன்னிங்ஸ்) – 75 (25.3) – நதுக்க பெர்னாந்து 5/20

புனித மரியார் கல்லூரி, கேகாலை (இரண்டாம் இன்னிங்ஸ்) (f/o) – 50/4 (24.4)

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்.