சாமிக்க, மதுசங்கவுக்கு உபாதை! ; இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு

Sri Lanka tour of India 2023

731

இலங்கை அணியின் வீரர்களான டில்ஷான் மதுசங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரின் உபாதைகள் தொடர்பிலான அறிவிப்பொன்றை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும்போது, இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்தார்.

ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி

வலது தோற்பட்டை பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக இவர், 6 ஓவர்கள் மாத்திரம் வீசியிருந்த நிலையில் களத்திலிருந்து வெளியேறினார். இந்தநிலையில், டில்ஷான் மதுசங்கவின் உபாதை தொடர்பில் அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை, “மதுசங்கவுக்கு தோற்பட்டை சிதைவு ஏற்பட்டுள்ளது. எனவே எக்ஸ்ரே மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இவருடைய உபாதை தொடர்பான அறிக்கைகள் கிடைத்த பின்னர், மதுசங்க தொடர்பில் அறிவிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மற்றுமொரு வீரரான சாமிக்க கருணாரத்னவும் நேற்றைய தினம் (11) நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னர் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சிக்கு முன்னர் சாமிக்க கருணாரத்னவின் மேல் உதடு பகுதியில் பந்து தாக்கியிருந்தது.

இதன்காரணமாக மேல் உதட்டில் அவருக்கு 3 தையல்கள் இடப்பிட்டிருந்தன. குறித்த இந்த உபாதையுடன் முதல் ஒருநாள் போட்டியில் இவர் விளையாடியதுடன், இரண்டாவது போட்டியில் இவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் வியாழக்கிழமை (11) நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<