Home Tamil ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி

ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி

Sri Lanka tour of India 2023

219

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்திய அணி இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

முதல் ஒருநாள் போட்டிக்கான திட்டம் என்ன? கூறும் தசுன் ஷானக!

முன்னதாக குவாஹட்டி அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய வீரர்களுக்கு வழங்கியிருந்தார்.

அதேவேளை இப்போட்டிக்கான இலங்கை அணி டில்சான் மதுசங்கவிற்கு ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் வழங்க சாமிக்க கருணாரட்ன மீண்டும் குழாத்திற்குள் இணைந்திருந்தார். அதேநேரம் இப்போட்டியில் மகீஷ் தீக்ஷனவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

மறுமுனையில் இலங்கையுடன் நடைபெற்ற T20 தொடரினை 2-1 எனக் கைப்பற்றிய இந்திய அணியின் தலைவராக ரோஹிட் சர்மா இப்போட்டியில் மீண்டும் பொறுப்பெடுக்க விராட் கோலி, மொஹமட் சிராஜ் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் இந்திய ஒருநாள் குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இலங்கை XI

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, டில்ஷான் மதுசங்க

இந்தியா XI

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, K.L. ராகுல், அக்ஷார் பட்டேல், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், உம்ரான் மலிக், யுஸ்வேந்திர சாஹல்

தொடர்ந்து முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இந்திய அணிக்கு சுப்மான் கில் மற்றும் ரோஹிட் சர்மா ஜோடி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது. இந்த ஜோடி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 143 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததோடு, இந்திய அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த சுப்மான் கில் தன்னுடைய 5ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 60 பந்துகளில் 11 பௌண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் தன்னுடைய 46ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் அதிரடியினை வெளிப்படுத்திய ரோஹிட் சர்மா தன்னுடைய தரப்பினை இன்னும் பலப்படுத்தினார். இதனை தொடர்ந்து ரோஹிட் சர்மாவின் விக்கெட்டினை டில்சான் மதுசங்க அவரினை போல்ட் செய்து கைப்பற்றினார். ரோஹிட் சர்மா ஆட்டமிழக்காமல் 67 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் உடன் 87 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

அதன் பின்னர் மத்திய வரிசையில் களமிறங்கிய விராட் கோலி, K.L. ராகுல் ஆகியோரின் ஆட்டங்களோடு இந்திய அணி மிகவும் வலுவான நிலையினை அடைந்து கொண்டது. பின்னர் கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த K.L. ராகுல் 29 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் 4 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்கள் எடுத்தார்.

K.L. ராகுலின் பின்னர் இலங்கை அணியின் களத்தடுப்பு தவறுகள் சிலவற்றை மேற்கொண்டதோடு அது விராட் கோலி தன்னுடைய 45ஆவது ஒருநாள் சதத்தினை அதிரடியான முறையில் பதிவு செய்யவும் உதவியாக இருந்தது.

விராட் கோலியின் சத உதவியுடன் இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 373 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் கோலி 87 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பெளண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க சாமிக் கருணாரட்ன, டில்சான் மதுசங்க, தனன்ஞய டி சில்வா மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 374 ஓட்டங்கள் என்கிற சவால் நிறைந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க, தனன்ஞய டி சில்வா மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் மாத்திரமே பொறுப்பான ஆட்டத்துடன் கைகொடுத்தனர். ஏனைய துடுப்பாட்டவீரர்கள் சொதப்பிய நிலையில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.

அபிசேக்கின் அபார பந்துவீச்சுடன் சென். ஜோன்ஸ் அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தசுன் ஷானக்க போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றதோடு தன்னுடைய இரண்டாவது ஒரு நாள் சதத்தினைப் பதிவு செய்து 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அட்ஙகலாக 108 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் அவர் இலங்கை அணியின் 9ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக கசுன் ராஜிதவுடன் இணைந்து 100 ஓட்டங்களையும் பகிர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய ஐந்தாவது ஒருநாள் அரைச்சதத்துடன் 80 பந்துகளில் 11 பௌண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் தனன்ஞய டி சில்வா 40 பந்துகளுக்கு 09 பௌண்டரிகள் உடன் 47 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தனன்ஞய டி சில்வா – பெதும் நிஸ்ஸங்க ஜோடி இலங்கை அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 72 ஓட்டங்களை குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பந்துவீச்சில் உம்ரான் மலிக் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் மொஹமட் சிராஜ் 2 விக்கெட்டுக்களை சுருட்டியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணிக்காக சதம் விளாசிய விராட் கோலி தெரிவாகினார். இனி இந்திய – இலங்கை அணிகள் மோதும் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியானது எதிர்வரும் வியாழக்கிழமை (07) கொல்கத்தா நகரில ஆரம்பமாகின்றது.

ஸ்கோர் விபரம்

Result


India
373/7 (50)

Sri Lanka
306/8 (50)

Batsmen R B 4s 6s SR
Rohit Sharma b Dilshan Madushanka 83 67 9 3 123.88
Shubman Gill lbw b Dasun Shanaka 70 60 11 0 116.67
Virat Kohli c Kusal Mendis b Kasun Rajitha 113 87 12 1 129.89
Shreyas Iyer c Avishka Fernando b Dhananjaya de Silva 28 24 3 1 116.67
KL Rahul b Kasun Rajitha 39 29 4 1 134.48
Hardik Pandya c Wanidu Hasaranga b Kasun Rajitha 14 12 0 1 116.67
Axar Patel c Avishka Fernando b Chamika Karunaratne 9 9 0 0 100.00
Mohammed Shami not out 4 4 0 0 100.00
Mohammed Siraj not out 7 8 0 0 87.50


Extras 6 (b 0 , lb 1 , nb 0, w 5, pen 0)
Total 373/7 (50 Overs, RR: 7.46)
Bowling O M R W Econ
Kasun Rajitha 10 0 88 3 8.80
Dilshan Madushanka 6 0 43 1 7.17
Wanidu Hasaranga 10 0 67 0 6.70
Chamika Karunaratne 8 0 54 1 6.75
Dunith Wellalage 8 0 65 0 8.12
Dasun Shanaka 3 0 22 1 7.33
Dhananjaya de Silva 5 0 33 1 6.60


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Axar Patel b Umran Malik 72 80 11 0 90.00
Avishka Fernando c Hardik Pandya b Mohammed Siraj 5 12 1 0 41.67
Kusal Mendis b Mohammed Siraj 0 4 0 0 0.00
Charith Asalanka c KL Rahul b Umran Malik 23 28 3 0 82.14
Dhananjaya de Silva c KL Rahul b Mohammed Shami 47 40 9 0 117.50
Dasun Shanaka not out 108 88 12 3 122.73
Wanidu Hasaranga c Shreyas Iyer b Yuzvendra Chahal 16 7 1 2 228.57
Dunith Wellalage c Shubman Gill b Umran Malik 0 1 0 0 0.00
Chamika Karunaratne c Rohit Sharma b Hardik Pandya 14 21 2 0 66.67
Kasun Rajitha not out 9 19 0 0 47.37


Extras 12 (b 0 , lb 4 , nb 0, w 8, pen 0)
Total 306/8 (50 Overs, RR: 6.12)
Bowling O M R W Econ
Mohammad Shami 9 0 67 1 7.44
Mohammed Siraj 7 1 30 2 4.29
Hardik Pandya 6 0 33 1 5.50
Umran Malik 8 0 57 3 7.12
Yuzvendra Chahal 10 0 58 1 5.80
Axar Patel 10 0 58 0 5.80



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<