டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக் ஒருநாள் தொடரில், இன்றைய தினம் (26) நடைபெற்ற இரண்டு போட்டிகளில் கொழும்பு மற்றும் கண்டி அணிகள் தங்களுடைய வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.
இன்றைய நாள் போட்டிகளை பொருத்தவரை குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, லஹிரு திரிமான்ன, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அரைச்சதங்களை பதிவுசெய்தனர்.
>> அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
கொழும்பு எதிர் தம்புள்ள
கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சரித் அசலங்க தலைமையிலான கொழும்பு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.
இன்றைய போட்டியில் தினேஷ் சந்திமால் விளையாடாத நிலையில், கொழும்பு அணியின் தலைவராக சரித் அசலங்க செயற்பட்டதுடன், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஜப்னா அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த தம்புள்ள அணி இந்த போட்டியிலும், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ஓவர்கள் நிறைவில் 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
தம்புள்ள அணிசார்பில் அதிகபட்சமாக லசித் அபேரத்ன 41 ஓட்டங்களையும், அணித்தலைவர் அஷான் பிரியன்ஜன் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கவில்லை. பந்துவீச்சை பொருத்தவரை பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும், கலன பெரேரா மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி குசல் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்கவின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் 20.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
வேகமாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 44 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, அணித்தலைவர் சரித் அசலங்க 46 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.
எனவே, இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள கொழும்பு அணி ஒரு போட்டியில் வெற்றியை தக்கவைத்ததுடன், தம்புள்ள அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Gayan Maneeshan | c Kusal Mendis b Kalana Perera | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ron Chandragupta | c Danushka Gunathilaka b Kalana Perera | 6 | 20 | 0 | 0 | 30.00 |
Lasith Abeyrathne | st Kusal Mendis b Prabath Jayasuriya | 41 | 53 | 7 | 0 | 77.36 |
Pavan Rathnayake | c Ashen Bandara b Charith Asalanka | 19 | 29 | 1 | 0 | 65.52 |
Ashan Priyanjan | c Kavindu Nadeeshan b Charith Asalanka | 31 | 25 | 2 | 1 | 124.00 |
Sonal Dinusha | run out (Charith Asalanka) | 15 | 34 | 1 | 0 | 44.12 |
Anuk Fernando | c Kusal Mendis b Sammu Ashan | 10 | 27 | 0 | 0 | 37.04 |
Duvindu Tillakaratne | c Ashen Bandara b Kavindu Nadeeshan | 12 | 29 | 0 | 1 | 41.38 |
Lakshan Sandajan | c Charith Asalanka b Prabath Jayasuriya | 4 | 7 | 0 | 0 | 57.14 |
Vishwa Fernando | not out | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Nuwan Thushara | lbw b Prabath Jayasuriya | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Extras | 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0) |
Total | 143/10 (40 Overs, RR: 3.58) |
Fall of Wickets | 1-0 (0.1) Gayan Maneeshan, 2-29 (6.6) Ron Chandragupta, 3-88 (18.6) Pavan Rathnayake , 4-115 (26.2) Ashan Priyanjan, 5-117 (28.4) Sonal Dinusha, 6-131 (34.4) Anuk Fernando, 7-142 (37.2) Lakshan Sandajan, 8-142 (38.1) Duvindu Tillakaratne, 9-143 (39.6) Nuwan Thushara, 10-16 (66) Lasith Abeyrathne, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kalana Perera | 5 | 0 | 18 | 2 | 3.60 | |
Lahiru Madushanka | 5 | 0 | 25 | 0 | 5.00 | |
Prabath Jayasuriya | 10 | 2 | 35 | 3 | 3.50 | |
Kavindu Nadeeshan | 7 | 0 | 33 | 1 | 4.71 | |
Charith Asalanka | 7 | 0 | 19 | 2 | 2.71 | |
Danushka Gunathilaka | 4 | 2 | 5 | 0 | 1.25 | |
Sammu Ashan | 2 | 0 | 7 | 0 | 3.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Danushka Gunathilaka | c Ashan Priyanjan b Duvindu Tillakaratne | 6 | 14 | 1 | 0 | 42.86 |
Kusal Mendis | c Pavan Rathnayake b Lakshan Sandajan | 67 | 44 | 6 | 4 | 152.27 |
Charith Asalanka | not out | 52 | 46 | 0 | 0 | 113.04 |
Avisha Fernando | c Vishwa Fernando b Nuwan Thushara | 12 | 14 | 2 | 0 | 85.71 |
Dimuth Karunaratne | not out | 4 | 6 | 0 | 0 | 66.67 |
Extras | 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0) |
Total | 144/3 (20.4 Overs, RR: 6.97) |
Fall of Wickets | 1-43 (5.1) Danushka Gunathilaka, 2-114 (15.3) Kusal Mendis, 3-129 (18.4) Avisha Fernando, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 2 | 0 | 32 | 0 | 16.00 | |
Ashan Priyanjan (l | 5 | 1 | 23 | 1 | 4.60 | |
Duvindu Tillakaratne | 3 | 0 | 15 | 0 | 5.00 | |
Sonal Dinusha | 1 | 0 | 9 | 0 | 9.00 | |
Lakshan Sandakan | 4 | 0 | 24 | 0 | 6.00 | |
Nuwan Thushara | 2.4 | 0 | 19 | 1 | 7.92 | |
Anuk Fernando | 3 | 0 | 22 | 0 | 7.33 |
ஜப்னா எதிர் கண்டி
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய கண்டி அணி மிகச்சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி 8 விக்கெடுகளை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நிபுன் ஹக்கல மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்காவிட்டாலும், லஹிரு திரிமான்ன மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இவர்கள் 54 ஒட்டங்களை இணைப்பாட்டமாக பெற, தனன்ஜய டி சில்வா 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுபக்கம் லஹிரு திரிமான்ன 56 ஓட்டங்களையும், சந்துஷ் குணதிலக்க 45 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தனர். பந்துவீச்சில் நிபுன் ரன்சிக 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ மற்றும் புலின தரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணிசார்பில் நிரோஷன் டிக்வெல்ல வேகமான அரைச்சதத்தை பதிவுசெய்ய, மறுமுனையில் அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் அரைச்சதம் கடந்தார். இவர்களின் அரைச்சதம் மற்றும் பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, செஹான் ஆராச்சிகே ஆகியோரின் சிறந்த பங்களிப்பின் ஊடாகவும் கண்டி அணி 39.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
நிரோஷன் டிக்வெல்ல 45 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, கமிந்து மெண்டிஸ் 45 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, கமில் மிஷார 34 ஓட்டங்கள், பெதும் நிஸ்ஸங்க 32 ஓட்டங்கள் மற்றும் சதீர சமரவிக்ரம 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
எனவே, தங்களுடைய முதல் போட்டியில் கண்டி அணி வெற்றிபெற்று, வெற்றியுடன் தொடரை ஆரம்பித்ததுடன், ஜப்னா அணி தங்களுடைய முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadeera Samarawickrama | lbw b Nipun Ransika | 18 | 23 | 3 | 0 | 78.26 |
Nipun Haggalla | c Kamil Mishara b Asitha Fernando | 10 | 19 | 0 | 0 | 52.63 |
Lahiru Thirimanne | c Sahan Arachchige b Nipun Ransika | 56 | 74 | 2 | 0 | 75.68 |
Dhananjaya de Silva | c Pathum Nissanka b Kamindu Mendis | 28 | 33 | 4 | 0 | 84.85 |
Janith Liyanage | lbw b Nipun Ransika | 41 | 63 | 3 | 1 | 65.08 |
Santhush Gunathilake | c Pathum Nissanka b Asitha Fernando | 45 | 50 | 3 | 0 | 90.00 |
Ishan Jayaratne | b Pulina Tharanga | 19 | 24 | 0 | 1 | 79.17 |
Shiran Fernando | c Niroshan Dickwella b Pulina Tharanga | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Jeffrey Vandersay | not out | 16 | 14 | 2 | 0 | 114.29 |
Dilum Sudeera | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 13 (b 1 , lb 2 , nb 1, w 9, pen 0) |
Total | 246/8 (50 Overs, RR: 4.92) |
Fall of Wickets | 1-28 (5.4) Sadeera Samarawickrama, 2-33 (7.4) Nipun Haggalla , 3-87 (17.6) Dhananjaya de Silva, 4-158 (34.1) Lahiru Thirimanne , 5-173 (36.5) Janith Liyanage, 6-173 (36.5) Ishan Jayaratne , 7-206 (44.3) Shiran Fernando , 8-243 (49.4) Santhush Gunathilake , |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 10 | 0 | 51 | 2 | 5.10 | |
Nipun Ransika | 8 | 0 | 41 | 3 | 5.12 | |
Lasith Crosspulle | 10 | 0 | 37 | 0 | 3.70 | |
Kamindu Mendis | 5 | 0 | 36 | 1 | 7.20 | |
Pulina Tharanga | 10 | 0 | 44 | 2 | 4.40 | |
Sahan Arachchige | 7 | 0 | 34 | 0 | 4.86 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c Dhananjaya de Silva b Shiran Fernando | 69 | 45 | 7 | 4 | 153.33 |
Pathum Nissanka | c Jeffrey Vandersay b Shiran Fernando | 32 | 45 | 3 | 0 | 71.11 |
Kamindu Mendis | b Nuwan Pradeep | 34 | 52 | 3 | 1 | 65.38 |
Oshada Fernando | b Jeffrey Vandersay | 18 | 17 | 4 | 0 | 105.88 |
Kamindu Mendis | not out | 57 | 45 | 5 | 1 | 126.67 |
Sahan Arachchige | not out | 28 | 35 | 1 | 1 | 80.00 |
Extras | 9 (b 0 , lb 1 , nb 1, w 7, pen 0) |
Total | 247/4 (39.4 Overs, RR: 6.23) |
Fall of Wickets | 1-105 (14.2) Niroshan Dickwella, 2-107 (16.4) Pathum Nissanka, 3-136 (21.5) Oshada Fernando, 4-179 (28.6) Kamindu Mendis, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ishan Jayaratne | 6 | 0 | 35 | 0 | 5.83 | |
Nuwan Pradeep | 8 | 0 | 65 | 1 | 8.12 | |
Dilum Sudeera | 3.4 | 0 | 23 | 0 | 6.76 | |
Dhananjaya de Silva | 5 | 0 | 35 | 0 | 7.00 | |
Shiran Fernando | 7 | 0 | 33 | 2 | 4.71 | |
Jeffrey Vandersay | 10 | 1 | 52 | 1 | 5.20 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<