அழைப்பு T20 தொடரிலிருந்து விலகும் வீரர்கள் விபரம் அறிவிப்பு

1346

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களை இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தயார்படுத்துவதற்காக ஒழுங்கு செய்துள்ள அழைப்பு T20 தொடர் நாளை (11) ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த தொடரின் அணிகளில் பங்கெடுக்கும் வீரர் மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர்

நான்கு அணிகள் பங்குபெறும் இந்த T20 தொடரில் புளூஸ் அணிக்காக ஆடவிருந்த அதிரடி துடுப்பாட்ட வீரரான ஹிமாஷ லியனகே, கிரேய்ஸ் அணிக்கு மாற்றப்பட்டிருப்பதோடு, உள்ளூர் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கமில் மிஷாரவும் கீறின்ஸ் அணியிலிருந்து கிரேய்ஸ் அணிக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். 

அதேநேரம், கிரேய்ஸ் அணிக்காக ஆடவிருந்த சுழல் பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரிய தற்போது ரெட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெறத் தவறியிருந்த வீரர்களான சந்துன் வீரக்கொடி, ஜெஹான் டேனியல், சங்கீத் கூரே, கோஷான் ஜயவிக்ரம, லஹிரு கமகே, அஷான் ரன்திக்க மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகிய 7 வீரர்களும் இந்த T20 தொடரில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், இந்த வீரர்களுக்கான பிரதியீட்டு வீரர்கள் எவரும் அறிவிக்கப்படவில்லை.

அதோடு கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளான வீரர்களான சசிந்து கொலம்பகே, நிமேஷ் விமுக்தி மற்றும் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் ஆகியோரும் இந்த தொடரிலிருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் திலான் சமரவீர

எதிர்வரும் 24ஆம் திகதி வரை கண்டியில் நடைபெறவிருக்கும் இந்த T20 தொடரில் கீறின்ஸ் அணியின் தலைவராக அஷான் பிரியஞ்சனும், ரெட்ஸ் அணியின் தலைவராக தினேஷ் சந்திமாலும், புளூஸ் அணியின் தலைவராக தனன்ஞய டி சில்வாவும், கிரேய்ஸ் அணியின் தலைவராக தசுன் ஷானக்கவும் செயற்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

(இந்த T20 தொடரினை ThePapare.com வாயிலாகவும், Dialog TV மற்றும் Dialog ViU செயலி வாயிலாகவும் நேரடியாக கண்டுகளிக்க முடியும்.)

திருத்தப்பட்ட அணி வீரர்கள் விபரம்

புளூஸ்

நிஷான் மதுசங்க, சதீர சமரவிக்ரம, ஹஷான் ரந்திக, தனன்ஜய டி சில்வா (தலைவர்), பவன் ரத்நாயக்க, அஷேன் பண்டார, அஞ்செலோ பெரேரா, செஹான் ஆராச்சிகே, லஹிரு சமரகோன், தனன்ஜய லக்ஷான், சுரங்க லக்மால், கலன பெரேரா, டில்ஷான் மதுசங்க, ஷிரான் பெர்னாண்டோ

கிறீன்ஸ்

லஹிரு உதார, மஹேல உடவத்த, கிரிஷான் சன்ஜுல, பெதும் நிஸ்ஸங்க, சமிந்த பெர்னாண்டோ, அஷான் பிரியன்ஜன் (தலைவர்), கமிந்து மெண்டிஸ், சம்மு அஷான், ரமேஷ் மெண்டிஸ், சுமிந்த லக்ஷான், இசான் ஜயரத்ன, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, நுவான் துஷார

ரெட்ஸ்

அவிஷ்க பெர்னாண்டோ, நிபுன் தனன்ஜய, தினேஷ் சந்திமால் (தலைவர்), ஓசத பெர்னாண்டோ, முதித் லக்ஷான், அசேல குணரத்ன, லசித் அபேரத்ன, சீகுகெ பிரசன்ன, சாமிக்க கருணாரத்ன, சந்துஷ் குணதிலக்க, பினுர பெர்னாண்டோ,  அசித பெர்னாண்டோ, ஹிமேஷ் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய

கிரேஸ்

மினோத் பானுக, லசித் குரூஸ்புள்ளே, சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, நுவனிந்து பெர்னாண்டோ, தசுன் ஷானக (தலைவர்), சதுரங்க டி சில்வா, லஹிரு மதுசங்க, மிலிந்த சிறிவர்தன, உதித் மதுஷான், நுவான் பிரதீப், சாமிக்க குணசேகர, மதீஷ பதிரன, கமில் மிஷார, ஹிமாஷ லியனகே

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<