அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர்

152
Chris Cairns

நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கிறிஸ் கெயின்ஸ் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

ICC T20 உலகக் கிண்ணத்துக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

தற்போது அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருக்கும் 51 வயது நிரம்பிய கிறிஸ் கெயின்ஸ், கடந்த வாரம் தனது இதயத்தில் ஏற்பட்ட கோளாறு ஒன்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

எனினும் நிலைமைகள் உக்கிரம் அடைந்ததன் காரணமாக தற்போது கிறிஸ் கெயின்ஸ் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள உயிர் ஆதரவு இயந்திரத்தின் (Life Support Machine) உதவியினை நாடியிருப்பதாக தெரிவிக்கப்படுவதோடு, விஷேட சிகிச்சைகளுக்காக சிட்னியில் அமைந்திருக்கும் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

மோசமான சாதனையுடன் தொடரை இழந்த அவுஸ்திரேலியா!

அதேநேரம், கிறிஸ் கெயின்ஸின் உடல் நிலை குறித்து கிரிக்கெட் வீரர்கள் அடங்கலாக உலகில் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பதுடன் அவர் பூரண சுகம் பெறுவதற்கு பிரார்த்தனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரராக இருந்த கிறிஸ் கெயின்ஸ், டெஸ்ட் போட்டிகளில் 218 விக்கெட்டுக்கள் அடங்கலாக 3,320 ஓட்டங்களை குவித்திருப்பதோடு, ஒருநாள் போட்டிகளில் தனது தாயக அணிக்காக 201 விக்கெட்டுக்கள் உள்ளடங்கலாக 4,950 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<