ஓவரின் ஏழாவது பந்தில் ஆட்டமிழந்த வீரர்

901
Fox Sport

கிரிக்கெட் விளையாடும் நாடுகளை பொருத்தவரை, சர்வதேச கிரிக்கெட் வீரர்களை அழைத்து லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டித் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட் தரத்தை ஒத்த வகையிலும், விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விடவும் அதிகமாக ரசிகர்கள் ஈர்க்கும் தொடர்களாகவும் அமைந்து வருகின்றன.

உபாதை காரணமாக மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள ஸ்மித்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், …

இவ்வாறான சர்வதேச தரத்தை கொண்டுள்ள கிரிக்கெட் தொடர்களில் நடுவர்களால் விடப்படும் ஒருசில தவறுகள் சில நேரங்களில் போட்டிகளில் பரபரப்பை ஏற்படுத்துவதுடன், சமுக வலைத்தளங்களிலும் அவை தொடர்பில் வைரலாக பரவுகின்றன. இவ்வாறான நிலையில், அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் லீக் (BBL) தொடரின் நேற்றைய போட்டியில் நடுவரால் விடப்பட்ட தவறொன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

நேற்றைய தினம் (30) பிக்பேஷ் லீக் தொடரின் 30வது லீக் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கோச்சர்ஸ் அணிகள் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி அணி 177 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கோச்சர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இந்தப் போட்டியின் வெற்றியிலக்கை நோக்கி ஸ்கோச்சர்ஸ் அணி துடுப்பெடுத்தாடும் போது, நடுவரின் தவறான தீர்ப்பு ஒன்றினால் ரசிகர்கள், வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என அனைவருக்கு மத்தியிலும் குழப்ப நிலை தோன்றியது.

சிட்னி அணி சார்பில் இரண்டாவது பந்து ஓவரை வீசிய பென் வோர்சுயிஸ் தனது ஓவரின் ஆறு பந்துகளையும் வீசி முடித்திருந்தார். எனினும், தவறாக பந்துகளை கணித்த நடுவர் மேலும் ஒரு பந்தினை வீசும் வாய்ப்பினை பந்து வீச்சாளருக்கு வழங்கினார். இந்நிலையில், ஓவரின் ஏழாவது பந்தினை வோர்சுயிஸ் வீச, சிட்னி அணியின் துடுப்பாட்ட வீரர் மிச்சல் கிலிங்கர், ஸ்டீவ் கெபீயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். குறித்த பிடியெடுப்பு தரைக்கு அருகில் இருந்ததால், மூன்றாவது நடுவர் பிடியெடுப்பை ஆராய்ந்து, அது ஆட்டமிழப்பு என தீர்ப்பளித்தார்.

முதலாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் …

எனினும், பந்து ஓவரின் ஏழாவது பந்து வீசப்பட்டமை குறித்து ஆடுகள நடுவர்களே முடிவு எடுக்க வேண்டும் என மூன்றாவது நடுவரால் குறிப்பிடப்பட்டது. இந்த ஆட்டமிழப்பானது அனைவர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

எனினும், ஐசிசியின் விதிமுறையின் கீழ், ஆடுகள நடுவர்கள் பந்தினை தவறுதலாக கணித்தாலும், அவர்களது முடிவுதான், பந்துகளை தீர்மானிக்கும் இறுதி முடிவு என்ற அடிப்படையில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, இந்த ஆட்டமிழப்பு தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கிரிக்கெட் அவுஸ்திரேலியா,  “நடுவரின் தீர்ப்பை மீளத் திருத்துவதற்கான எந்தவித வாய்ப்புகளும் இல்லை. எனினும் போட்டி நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் மதிப்பாய்வு அறிக்கையின் மூலம், அணி தங்களுடைய கருத்துகளை பதிவுசெய்ய முடியும். இதன் பின்னர், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து கிரிக்கெட் சபை தங்களுடைய கருத்தை தெரிவிக்கும்என குறிப்பிடப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<