தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளரான ஹட்டன் நஷனல் வங்கி

128

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று முடிந்திருக்கும் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஹட்டன் நஷனல் வங்கி அணி, விமானப்படை விளையாட்டுக் கழகத்தினை 47-27 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

டயலொக்கின் ஆதரவோடு நடைபெறும் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர்

தேசிய வலைப்பந்து சம்மேளனம் (NFSL) …

கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த இந்த தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் நாடு பூராகவும் இருந்து 24 வலைப்பந்து அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பங்குபற்றியிருந்தன. தொடரின் முதல்சுற்றுப் போட்டிகள் கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்ததோடு, முதற்சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் சம்பியன் பட்டம் வென்ற அணிகளான ஹட்டன் நஷனல் வங்கி அணி, விமானப்படை விளையாட்டுக் கழகம், செலான் வங்கி அணி மற்றும் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் ஆகியவை இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியிருந்தன.

பண்டாரகமவில் நடைபெற்ற இரண்டாம் சுற்றுக்கான ஆட்டங்கள் லீக் முறையில் இடம்பெற்றன. இதில் நான்கு அணிகளும் எதிரணிகளுடன் தலா ஒரு முறை மோதிக்கொண்டன. ஹட்டன் நஷனல் வங்கி இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தினை 55-41 என்கிற புள்ளிகள் கணக்கிலும், விமானப்படை விளையாட்டுக் கழகத்தினை 51-41 என்கிற புள்ளிகள் கணக்கிலும், செலான் வங்கி அணியினை 59-45 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

மறுமுனையில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த விமானப்படை அணி செலான் வங்கி அணியினை 64-40 என்கிற புள்ளிகள் கணக்கிலும், இராணுவப்படை அணியினை 50-37 என்கிற புள்ளிகள் கணக்கிலும் இரண்டாம் சுற்றில் தோற்கடித்திருந்தது.

இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இரண்டு அணிகளும் தேசிய வலைப்பந்து அணியின் வீராங்கனைகளை கொண்டிருந்த காரணத்தினால் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் இலங்கை ஏ குழுவில்

இங்கிலாந்தின் லிவர்பூலில் அடுத்த வருடம் …

வென்னப்புவ நகரில் தொடங்கிய இறுதிப் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் விமானப்படை விளையாட்டுக் கழகம் ஆதிக்கம் காட்டிய போதிலும் ஹட்டன் நஷனல் வங்கியே முதல் கால்பகுதியினை 10-7 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது.

ஆட்டத்தின் இரண்டாம் கால்பகுதியில் பந்துப்பரிமாற்றத்தில் விமானப்படை விளையாட்டுக் கழகம் செய்த தவறுகளினால் இரண்டாம் கால்பகுதியும் ஹட்டன் நஷனல் வங்கியின் வசமானது. இதனடிப்படையில் 22-14 என்கிற புள்ளிகள் கணக்கில் ஹட்டன் நஷனல் வங்கி ஆட்டத்தின் முதல் அரைப்பகுதியில் முன்னிலை பெற்றது.

ஏற்கனவே 8 புள்ளிகளால் முன்னிலை அடைந்திருந்த ஹட்டன் நஷனல் வங்கி அணி ஆட்டத்தின் எஞ்சிய இரண்டு கால்பகுதிகளையும் 13-7, 11-7 எனக் கைப்பற்றி 47-27 என்கிற புள்ளிகள் கணக்கில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளர்களாக மாறியது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…