இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு!

England tour of New Zealand 2025

100

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான நியூசிலாந்து குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து குழாத்தில் உபாதை காரணமாக கடந்த போட்டிகளை தவறவிட்டிருந்த அணித்தலைவர் மிச்சல் செண்ட்னர் மற்றும் துடுப்பாட்ட வீரர் ரச்சின் ரவீந்ரா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். 

இந்திய டெஸ்டில் முரண் நடத்தை; மேற்கிந்திய தீவுகள் வீரருக்கு அபாரதம்

பென் சீர்ஸ் கடந்த வாரம் பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், கேன் வில்லியம்சன் T20I தொடருக்கான குழாத்தில் இடம்பெறவில்லை. எனினும் இவர் ஒருநாள் குழாத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவுஸ்திரேலிய தொடரில் விளையாடியிருந்த ஜிம்மி நீஷம் அணியில் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், இஸ் சோதி அணியில் இடம்பெறவில்லை. 

எவ்வாறாயினும் பின் எலன், எடம் மில்னே, வில் ஓ ரூர்க், கிளேன் பிலிப்ஸ் மற்றும்  லொக்கி பேர்குஸன் ஆகியோர் உபாதை காரணமாக அணித்தெரிவில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. 

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து குழாம் 

 

மிச்சல் செண்ட்னர் (தலைவர்), மைக்கல் பிரேஸ்வெல், மார்க் செப்மன், டெவோன் கொன்வே, ஜேகப் டஃபி, ஷெக் போல்க்ஸ், மெட் ஹென்ரி, பெவன் ஜேக்கப்ஸ், கெயல் ஜெமிசன், டெரைல் மிச்சல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்ரா, டிம் ரொபின்ஷன், டிம் செய்பர்ட் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<