சிக்கன பந்து வீச்சில் சாதனையை சமன் செய்தார் வெலகெதர

115

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சானக வெலகெதரவினால் நேற்று நடைபெற்ற உள்ளுர் டி-20 போட்டியின் மூலம் ஒரு சாதனை சமன் செய்யப்பட்டது.

இந்த சாதனையானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற Sinhalese sports clubக்கு எதிராக விளையாடிய வெலிகெதரவினால் 4 ஒவர்கள் பந்து வீசி 2 ஒட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டதன் மூலமே இந்த சாதனை சமன் செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் கடந்த வருடம் 4 ஒவர்களுக்கு 2 ஒட்டங்கள் கொடுத்து 3 மெய்டின் ஒவர் அடங்களாக 2 விக்கெட்டுகள் பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர் கிரிஸ் மோரிஸின் சாதனையை பகிர்ந்து கொள்வதன் மூலம் இவரும் இச் சாதனைக்கு உரித்துடையவர் ஆனார்.

இதுவே கிரிக்கெட் வரலாற்றின் சிக்கன பந்து வீச்சாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.