இளம் வீரர்களுடன் சவாலை எதிர்கொள்ளும் டெல்லி கெபிடல்ஸ்

159
BCCI

கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடர் இன்று (9) ஆரம்பமாகும் நிலையில், கடந்த பருவகாலத்திற்கான இந்த தொடரில் இரண்டாம் இடம் பெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணியும் இந்த ஆண்டு சம்பியன் பட்டக்கனவுகளுடன் களமிறங்குகின்றது.

முதல் போட்டி – எதிர் சென்னை சுபர் கிங்ஸ் (ஏப்ரல் 10, மும்பை) 

IPL தொடரின் இறுதிப் போட்டி ஒன்றுக்கு கடந்த ஆண்டில் மாத்திரமே தெரிவாகியிருந்த டெல்லி கெபிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தமது முதல் வெற்றிக்கிண்ணத்தை பறிகொடுத்தது. அவ்வணியினை முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு வழிநடாத்திய டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் பாரிய உபாதை ஒன்றின் காரணமாக இம்முறை தொடரில் இருந்து விலகியிருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ரிசப் பாண்டிற்கு பாரிய சவால் ஒன்று உருவாகியிருக்கின்றது. 

செய்த தவறுகளை திருத்த எதிர்பார்க்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கடந்த IPL பருவங்களில் பல மாற்றங்களை மேற்கொண்டு இன்று ஒரு பலம்வாய்ந்த அணிகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் டெல்லி கெபிடல்ஸ் அணி இம்முறை பலவீரர்களை விடுவித்த போதும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் போன்ற வீரர்களின் சேர்க்கை அவ்வணிக்கு மிகப் பெரிய பலமாக அமைகின்றது. 

பலம்

இளம் வீரர்களின் சேர்க்கை, தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் என ஒரு உற்சாக அமைப்பாக இருப்பது டெல்லி கெபிடல்ஸ் அணியின் பிரதான பலமாக இருக்கின்றது.

அணித்தெரிவு 

டெல்லி கெபிடல்ஸ் அணியின் முதல் பதினொருவர் அணியினை நோக்கும் அவ்வணிக்கு இருக்கும் வீரர்களில் துடுப்பாட்டவீரர்களாக அணித்தலைவர் ரிசாப் பாண்ட், சிக்கர் தவான், ப்ரித்வி சாஹ், அஜிங்கியா ரஹானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பலம் சேர்க்க எதிர்பார்க்கப்படும் நிலையில், பந்துவீச்சுத்துறைக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், ககிஸோ றபாடா, இஷான்த் சர்மா மற்றும் டொம் கர்ரன் ஆகியோர் பங்களிப்பினை வழங்கவுள்ளனர். 

அக்ஷர் பட்டேலை தொடர்ந்து தேவ்துத் படிக்கலுக்கு கொவிட்-19 தொற்று

முழுமையான அணிக்குழாம்

ரிசாப் பாண்ட் (தலைவர்), சிக்கர் தவான், ப்ரீத்வி சாஹ், அஜிங்கியா ரஹானே, இஷான்த் சர்மா, சிம்ரோன் ஹெட்மேயர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், அக்ஷார் பட்டேல், அவேஷ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின், லலித் யாதவ், ப்ரவீன் டுபே, ககிஸோ றபாடா, என்ட்ரிச் நோர்ட்ஜே, கிறிஸ் வோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிப்பால் பட்டேல், விஷ்னு வினோத், லுக்மான் ஹூசைன் மேரிவாலா, M. சித்தார்த், டொம் கர்ரன், சேம் பில்லிங்ஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<