சுபர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவராக டி கொக் நியமனம்!

SA T20 League 2023

150

SA T20 லீக்கில் பங்கேற்கவுள்ள டர்பன் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவராக தென்னாபிரிக்காவின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள SA T20 லீக் தொடர் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான திகதிகள் மற்றும் குழாம்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

உலகக் கிண்ணத்துக்கு ஆப்கான் நேரடி தகுதி; இலங்கைக்கு சிக்கல்!

இவ்வாறான நிலையில் டர்பன் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவராக குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளார். குயிண்டன் டி கொக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் மாத்திரம் விளையாடிவருகின்றார். இவர் தென்னாபிரிக்க அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

IPL தொடரில் இவர் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடிவருவதுடன், குறிந்த இந்த நிர்வாகம் SA T20 லீக்கில் டர்பன் சுபர் ஜயண்ட்ஸ் அணியை வாங்கியுள்ளதன் காரணமாக, தலைமை பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

டர்பன் சுபர் ஜயண்ட்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வீரர்களான ஜேசன் ஹோல்டர், கெயல் மேயர்ஸ், கீமோ போல் மற்றும் ஜொன்ஸன் சார்ல்ஸ் ஆகியோருடன், இங்கிலாந்து அணியின் ரீஸ் டொப்லே மற்றும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

SA T20 லீக் தொடர் ஜனவரி மாதம் 10ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், போட்டித்தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<