தசுன் ஷானக்கவுக்கு PSL அறிமுகம்

157
Dasun Shanaka played first match in PSL

பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) T20 லீக் தொடரில் பெசாவர் ஷல்மி அணிக்காக இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணிகளின் தலைவர் தசுன் ஷானக்க களமிறங்கியிருக்கின்றார்.

>> டேவிட் வோர்னரின் உடல்நிலை தொடர்பான அறிவிப்பு

பாகிஸ்தான் சுபர் லீக் T20 தொடரின் 2023ஆம் ஆண்டு பருகவகாலத்திற்கான போட்டிகள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்தப் போட்டித் தொடரின் 9ஆவது லீக் ஆட்டம் நேற்று (20) பெசாவர் ஷல்மி மற்றும் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணிகள் இடையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பெசாவர் ஷல்மி அணிக்காகவே தசுன் ஷானக்க களமிறங்கியதோடு இது PSL போட்டிகளில் அவரது அறிமுகமாகவும் மாறியிருந்தது.

அதன்படி தசுன் ஷானக்க தனது அறிமுகப் போட்டியில் பந்துவீச்சாளராக 2 ஓவர்களை வீசியிருந்ததோடு, துடுப்பாட்டத்தில் இறுதி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் இருந்து 16 ஓட்டங்களையும் எடுத்திருந்தார்.

இதேவேளை தசுன் ஷானக்கவின் பெசாவர் ஷல்மி அணி குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்ததோடு, அது இந்தப் பருவத்திற்கான PSL தொடரில் பெசாவர் ஷல்மி அணியின் இரண்டாவது வெற்றியாகவும் மாறியிருந்தது.

>> இந்திய அணிக்கு புதிய தலைவர்

தசுன் ஷானக்க தவிர நுவான் துஷார, பானுக்க ராஜபக்ஷ போன்ற இலங்கை வீரர்களும் 2023ஆம் ஆண்டுக்கான பருவத்தில் PSL போட்டிகளில் அறிமுகம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<