இலங்கை அணியின் புதிய தலைவராக மாறும் தசுன் ஷானக்க

2515

இலங்கை ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் அணிகளின் புதிய தலைவராக துடுப்பாட்ட சகலதுறைவீரரான தசுன் ஷானக்க நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். 

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருதரப்பு தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியினை ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் வழிநடாத்திய குசல் பெரேரா தொடர்ச்சியாக மோசமான முடிவுகளைக் காட்டியதனால் அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய அணித்தலைவர் பொறுப்பு தசுன் ஷானக்கவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 

அதன்படி, இந்திய அணிக்கு எதிராக இம்மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இருந்து இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக தசுன் ஷானக்க செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சாதனைகளுக்காக மீண்டும் எழுந்து நிற்கவுள்ள R.பிரேமதாஸ அரங்கம்

ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த தசுன் ஷானக்க அப்போது T20 அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியினை அவர்களது சொந்த மண்ணில் வைத்து 3-0 என T20 தொடரில் வைட்வொஷ் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம் தசுன் ஷானக்க அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் இலங்கை அணிக்காக ஜொலித்திருந்த வீரர்களில் ஒருவராக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<