புயலினால் தாமதமான இலங்கை கிரிக்கெட் அணியின் ஓமான் பயணம்

1928
Cyclone Shaheen delays Sri Lanka’s departure for Oman

ஓமானில் வீசிய சஹீன் புயல் காரணமாக நேற்று (03) இடம்பெறவிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் ஓமான் பயணம் தாமதமாகியிருப்பதாக ThePapare.com இற்கு அறியக்கிடைக்கின்றது.

>> 2012 T20 உலகக் கிண்ணத்தில் களைக்கட்டிய அஜந்த மெண்டிஸின் மாய சுழல்!

T20 உலகக் கிண்ணம், ஓமான் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றுக்காக தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை T20 அணி விஷேட விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை (03) காலை ஓமான் செல்லவிருந்த நிலையிலையே, ஓமானில் வீசிய சஹீன் புயல் காரணமாக இலங்கை அணியின் ஓமான் பயணம் இரண்டு தடவைகள் தாமதமாகியிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும், இலங்கை கிரிக்கெட் அணி சில எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இன்று (04) ஓமான் பயணமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை – ஓமான் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடர் இம்மாதம் 07ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில், மஸ்கட் நகரில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மாயஜாலம் செய்து இலங்கையின் உலகக் கிண்ண கனவினை நனவாக்கிய ஹேரத்

ஓமான் அணியுடனான போட்டிகளை அடுத்து, T20 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகள் இரண்டிலும் ஆடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர் அதன் பின்னர், T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் எதிர்வரும் 18ஆம், 20ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நபீமியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை முறையே எதிர்கொள்ளவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை அறிய <<