இந்தியாவுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த அவுஸ்திரேலியா

223

உஸ்மான் கவாஜாவின் கன்னி ஒருநாள் சதம் மற்றும் தீர்க்கமான பந்துவீச்சு மூலம் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடர் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

அடம் சம்பா தலைமையில் அவுஸ்திரேலிய பந்துவீச்சு வரிசை சிறப்பாக செயற்பட்டதோடு குறிப்பாக சம்பா 123 ஓட்டங்களை பெற்று சவாலாக இருந்த இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி உட்பட முக்கிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்…

இதன் மூலம் ரான்ச்சியில் வெள்ளிக்கிழமை (8) நடைபெற்ற போட்டியில் 314 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியை 48.2 ஓவர்களில் 281 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அணியால் முடிந்தது. எனினும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியால் 2-1 என முன்னிலை பெற முடிந்தது.

எவ்வாறாயினும் அண்மைக்காலமாக வெற்றிகளுக்காக வாடும் அவுஸ்திரேலிய அணி 2017 செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் வெளிநாட்டு மண்ணில் பெறும் முதலாவது ஒருநாள் வெற்றி இதுவாகும்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 116 ஓட்டங்களை பெற்று இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்த விராட் கோஹ்லி இந்தப் போட்டியில் தனது 41 ஆவது ஒருநாள் சதத்தை பெறுவதற்கு 16 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். அடம் சம்பா வீசிய பந்தில் அவர் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி சார்பில் உஸ்மான் கவாஜா மற்றும் அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்கு 193 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். 24 ஆவது போட்டியில் தனது முதல் ஒருநாள் சதத்தை பெற்ற உஸ்மான் கவாஜா 104 ஓட்டங்களையும் 22 ஒருநாள் போட்டிகளின் பின் தனது முதல் அரைச் சதத்தை பெற்ற ஆரோன் பின்ச் 93 ஓட்டங்களையும் குவித்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட வந்த இந்திய அணி 86 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் விராட் கோஹ்லி, கேதர் ஜாதவ்வுடன் இணைந்து 88 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு எதிரணிக்கு சவால் கொடுத்தார். எனினும் விராட் கோஹ்லியின் ஆட்டமிழப்புக்கு பின் இந்திய அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.

இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி சண்டிகாரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெறவுள்ளது.

ஸ்மித், வோனருக்கு அவுஸ்திரேலிய அணியில் இடமில்லை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) பாகிஸ்தான் அணியுடன் ஐக்கிய அரபு…

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட குழு ஒன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய துணைப்படை பொலிஸாருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் இந்தப் போட்டியில் இராணுவ தொப்பி அணிந்து பங்கேற்றிருந்தனர். விளையாட்டில் வழக்கத்திற்கு மாறான தேசப்பற்றை காட்டும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. எனினும் இது ஐ.சி.சி ஒழுங்கு விதிகளை மீற வாய்ப்பு உள்ளது.

போட்டியின் சுருக்கும்.

அவுஸ்திரேலியா – 313/5 (50) – உஸ்மான் கவாஜா 104, ஆரோன் பின்ச் 93, கிளென் மெக்ஸ்வெல் 47, மார்க் ஸ்டொய்னிஸ் 31*, குல்தீப் யாதவ் 3/64

இந்தியா – 281 (48.2) – விராட் கோஹ்லி 123, விஜே சங்கர் 32, பெட் கம்மின்ஸ் 3/37, ஜை ரிச்சட்சன் 3/37, அடம் சம்பா 3/70

முடிவு – அவுஸ்திரேலிய 32 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<