சமீரவிற்குப் பதிலாக சமிந்த பண்டார

1974
Chaminda Bandara

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஏற்கனவே முக்கியமான இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உபாதை காரணமாக நாடு திரும்பியுள்ளார்கள். அதில் தம்மிக்க பிரசாத் தோற்பட்டை உபாதை காரணமாகவும், துஸ்மந்த சமீர முதுகு உபாதை காரணமாகவும் நாடு திரும்பவுள்ளார்கள்.

இந்நிலையில் இவர்களுக்குப் பதிலாக அணியில் இணையும் வீரர்களில் தம்மிக்க பிரசாத்திற்குப் பதிலாக குசல் பெரேரா அணியில் வெகுவிரைவில் இணையவுள்ளார். ஆனால் துஸ்மந்த சமீரவின் இடத்தை யார் நிரப்புவது என்ற கேள்வி இருந்தது. அதற்கு வெளிவரும் நம்பகமான செய்திகளின் படி சமீரவிற்குப் பதிலாக சமிந்த பண்டார என்ற வீரர் அணியில் இணையவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இறுதிப்போட்டியில் பெங்களூர்

24 வயதான சமீரவிற்கு 4 மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையிலேயே, 29 வயதான சமிந்த பண்டார இலங்கை அணியில் இணைவார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

கேகாலை புனித மேரிஸ் கல்லூரியைச் சேர்ந்த சமிந்த பண்டார 5 வருட காலங்களில் 51முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 141 விக்கட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  மார்ச் மாதம் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக அவர் விளையாடிய இறுதிப் போட்டியில் 68 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். அத்தோடு நடைபெற்று முடிவடைந்த AIA பிரீமியர் லீக் தொடரில் அதிக விக்கட்டுகளைக் கைப்பற்றிய பந்து வீச்சாளர்களில் முதல் 15 இடங்களில் உள்ள ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் சமிந்த பண்டாரவே. 2015/16ஆம் ஆண்டுக்கான AIA பிரீமியர் லீக் தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய அவர்  26.30 என்ற பந்துவீச்சு சராசரியில் 33 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். புதிய பந்துகளில் சிறப்பாக இரண்டு வகையிலும் பந்தை ஸ்விங் செய்யும் திறமை இவரிடம் உள்ளது என்பது முக்கிய அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்