IPL தொடரை இலங்கையில் நடத்தலாம் – கவாஸ்கர்

433

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் யோசனை கூறியுள்ளார்.  

இந்திய வீரர்களுடன் மாத்திரம் IPL நடத்தப்படும்

உலகெங்கிலும் பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. அதேபோன்று, மார்ச் மாத இறுதியிலிருந்து எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை.   

அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் காலவரையறை இன்றி தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இதேநேரம், கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகிவிருந்த .பி.எல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

எனினும், T20 உலகக் கிண்ணப் போட்டிகள் இரத்து செய்யப்பட்டால் அந்தக் காலப்பகுதியில் .பி.எல் தொடரை இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு வருகின்றது.

இந்த நிலையில், இந்தியா டுடே பத்திரிகைக்கு சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில்,   

”கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் குறைந்ததுக்டோபர் மாதம் வரை இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது பாதுகாப்பானதாக இருக்காது. மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் அடுத்த மாதம் நடக்கும் இங்கிலாந்துமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர், மீண்டும் கிரிக்கெட் போட்டியை தொடங்கலாமா? இல்லையா? என்பதை மதிப்பிடுவதற்கு உதவியாக இருக்கும்

மைதானத்திற்குள் குறைந்த அளவு  ரசிகர்களை அனுமதிக்கலாம் என்ற அவுஸ்திரேலிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து அங்கு T20 உலகக் கிண்ணப் போட்டி நடப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது

எனவே, ஒவ்வொரு அணிகளும் அங்கு 3 வாரங்களுக்கு முன் சென்று தனிமைப்பத்திக் கொள்ள வேண்டும். பிறகு ஏழு நாட்கள் பயிற்சிப் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்

எனவே, T20 உலகக் கிண்ணப் போட்டி திட்டமிட்டபடி நடைபெற்றால் அதன் பிறகுக்டோபரில் .பி.எல் தொடரை நடத்துவது கடினமாகி விடும். எனவே செப்டம்பர் மாதத்தில் .பி.எல். போட்டியை நடத்தலாம்.  

T20 உலகக் கிண்ணத்தை கருத்திற்கொள்ளாது ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா?

குறிப்பாக, இந்தியாவை பொறுத்தமட்டில் அது பருவமழை காலம் என்பதால் அந்த சமயத்தில் இந்தியாவில் .பி.எல் தொடரை நடத்த முடியாது. அதற்குப் பதிலாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையில் .பி.எல். போட்டியை நடத்தலாம்

ஒவ்வொரு அணியும் இரண்டு முறை மோதுவதற்குப் பதிலாக தலா ஒரு தடவை மட்டும் மோதும் வகையில் போட்டி அட்டவணையை சுருக்க வேண்டும். இந்த வகையில் மட்டுமே இந்த ஆண்டில் .பி.எல். போட்டியை நடத்த சாத்தியம் உள்ளது

எதுஎவ்வாறாயினும், இலங்கை இல்லாவிட்டால் ஐக்கிய அரபு இராட்சியத்திலும் .பி.எல் தொடரை நடத்தலாம்” என அவர் தெரிவித்தார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<