2008க்குப் பிறகு முதல்முறையாக புதிய ஜேர்சியுடன் களமிறங்கும் CSK

197
CSK

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்குத் தயாராகிவரும் முன்னாள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புதிய ஜேர்சியுடன் களம் இறங்குகிறது.

2008ஆம் ஆண்டில் இருந்து ஒரே ஜேர்சியுடன் வலம் வந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதல் முறையாக அதன் வடிவமைப்பில் மாற்றம் செய்து புதிய ஜேர்சியுடன் இம்முறை ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளது

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியின் 14ஆவது பருவம் ஏப்ரல் 9ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, அஹமதாபாத், டெல்;லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் இம்முறை போட்டிகள் நடைபெறவுள்ளன

எனினும், கொரோனா தொற்று அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கையாக தொடக்க ஆட்டங்களில் ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

IPL தொடரிலிருந்தும் நீக்கப்படும் ஸ்ரேயாஷ் ஐயர்?

இதன்படி, ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு தோனி உள்ளிட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்ததுடன், தற்போது மும்பையை வந்தடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜேர்சியை தோனி அறிமுகப்படுத்தும் வீடியோவை அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், தோனி ஒரு மேசையில் அமர்ந்திருக்கும் நிலையில், புதிய ஜேர்சியை ஒரு பையில் இருந்து எடுத்து ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தது. இறுதியில் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு விசில் போடு என தோனி கூறினார்.

இந்தியாவின் இராணுவப் படையினரை கௌரவிக்கும் வகையில் இராணுவ சீருடைக்குரிய நிறம், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஜேர்சியின் தோள்பட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை ஐபிஎல் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால் மூன்று நட்சத்திரங்களும் சென்னை அணியின் ஜேர்சியில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

Video – Legends தொடரில் Dilshan & Co படைத்த சாதனைகள்..!|Sports RoundUp – Epi 154

இதுகுறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,

இந்திய இராணுவத்தின் முக்கியத்துவத்தையும், அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டும் விதமாகவும், அது குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கிலும் எங்கள் அணியின் ஜேர்சியில் இராணுவ சீருடையின் நிறத்தை இணைத்துள்ளோம். இராணுவ வீரர்கள் தான் நாட்டின் உண்மையான ஹீரோக்கள் என்றார்.

முன்னதாக, கடந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், இந்திய இராணுவ வீரர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க 2 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மூன்று தடவைகள் ஐபிஎல் சம்பியன் பட்டத்தை வென்றுள்ள தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்த முறை தங்கள் அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது

ஒரே போட்டியில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி

குறிப்பாக, ரொபின் உத்தப்பா, மொயின் அலி, கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும், கடந்த வருடம் விளையாடாத சுரேஷ் ரெய்னாவும் சென்னை அணியில் இணைந்து கொண்டுள்ளார்.

இதனிடையே, இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 10ஆம் திகதி டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்கிறது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…