கிரிக்கெட் உலகில் நடைபெறும் பிரபல்யமான T20 லீக் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ் T20 லீக் தொடரின் 10ஆவது பருவகாலத்திற்கான போட்டி அட்டவணை (லீக் போட்டிகள்) நேற்று (15) அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டது.  

கிரிக்கெட் நடுவரால் முழு கிராமத்துக்கும் Coverage வசதி

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லீக் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ் லீக் தொடர் ஒவ்வொரு வருடத்தின் இறுதிப்பகுதி மற்றும் அடுத்த வருடத்தின் ஆரம்ப பகுதியை ஒத்ததாக நடைபெறும். அதன்படி, இவ்வருடம் 2020-21ஆம் பருவகால தொடருக்கான போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி முதல் அடுத்த வருடம் பெப்ரவரி 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.  

இதற்கிடையில் சுற்றுலா இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறுவதன் காரணமாக டிசம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை எந்தவிதமான பிக்பேஷ் போட்டிகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மொத்தமாக எட்டு அணிகள் பங்கேற்கும் குறித்த தொடரில் 60 போட்டிகள் நடைபெறவுள்ளன. பிக்பேஷ் லீக் தொடரின் நடப்பு சம்பியனாக சிட்னி சிக்ஸர்ஸ் அணி காணப்படுகிறது.  

ஆடவருக்கான பிக்பேஷ் லீக் தொடர் நடைபெறுவதை போன்று கடந்த 2015-16ஆம் ஆண்டு முதல் 8 அணிகள் பங்குபற்றும் மகளிருக்கான பிக்பேஷ் T20 லீக் தொடரும் நடைபெற்று வருகிறது. ஆடவர் பிக்பேஷ் லீக் தொடர் நடைபெறுவதற்கு முன்னர் மகளிர் பிக்பேஷ் லீக் தொடர் நடைபெறும். அந்த வகையில் 6ஆவது மகளிருக்கான பிக்பேஷ் லீக் தொடர் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.  

கங்குலியை தேற்றிய இலங்கை வீரர்கள்: சங்கக்கார வெளியிட்ட இரகசியம்

இந்நிலையில் ஆடவருக்கான பிக்பேஷ் தொடரின் லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், எலிமினேட்டர், காலிறுதி, நொக்-அவுட், செலஞ்சர் ஆகிய போட்டிகளுக்கான திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இறுதிப்போட்டி பெப்ரவரி 6ஆம் திகதி நடைபெறும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆடவர் பிக்பேஷ் T20 லீக் தொடர் போட்டி அட்டவணை  

insidesport

மகளிர் பிக்பேஷ் T20 லீக் தொடர் போட்டி அட்டவணை  

insidesport

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<