கோப்பா அமெரிக்கா: உருகுவேவை வீழ்த்திய பெரு அரையிறுதியில்

139
Image - Getty

நட்சத்திர வீரர் லுவிஸ் சுவாரஸ் தவறவிட்ட பெனால்டி சூட்அவுட் கோலை அடுத்து கோப்பா அமெரிக்க கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் பெரு அணியிடம் உருகுவே 5-4 என்ற பெனால்டிகளால் தோல்வியை சந்தித்தது.  

கோப்பா அமெரிக்க கிண்ண அரையிறுதியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள ஆர்ஜன்டீனா, பிரேசில்

கோப்பா அமெரிக்க கிண்ண காலிறுதிப்….

சல்வாடோரில் நடைபெற்ற இந்த போட்டியில் உருகுவே புகுத்திய மூன்று கோல்கள் மறுக்கப்பட்ட நிலையில் 90 நிமிடங்கள் முடிவில் 0-0 என போட்டி சமநிலை அடைந்தது. 

இந்நிலையில் முடிவை தீர்மானிக்கும் பெனால்டியில் முதல் உதையை பெற்ற சுவாரஸ் வலையை நோக்கி உதைத்போது அந்தப் பந்து பெரு கோல்காப்பளர் பெட்ரோ கோலஸ்ஸின் நெஞ்சில் பட்டு வெளியேறியது. ஏனைய அனைத்து வீரர்களும் தமது ஸ்பெனால்டி உதைகளை வலைக்குள் செலுத்திய நிலையில் எடிசன் பிளோரஸ் கோலுக்குள் செலுத்தியதன் மூலம் பெரு அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.    

இதன்படி பெரு அணி அரையிறுதியில் அண்டை நாடான சிலியை எதிர்கொள்ளவிருப்பதோடு போட்டியை நடத்தும் பிரேசில் மற்றைய அரையிறுதியில் ஆர்ஜன்டீனாவுடன் மோதும்.

இந்தப் போட்டியில் ஆரம்பம் தொட்டு உருகுவே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. எனினும் ஜோர்ஜியன் டி அரஸ்கேடா, எடிசன் கவானி மற்றும் சுவாரஸ் அனைவரும் பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் அந்த ஒவ்வொரு கோலும் வீடியோ உதவி நடுவரிடம் ஆராயப்பட்டு மறுக்கப்பட்டன.  

கோப்பா அமெரிக்கா அரையிறுதியில் பிரேசில்

பரகுவே அணிக்கு எதிரான காலிறுதிப்….

மறுபுறம் பெரு அணி முழு நேரத்தில் ஒற்றை உதை கூட இலக்கை நோக்கி செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தப்பது.  

இதனால், இம்முறை கோப்பா அமெரிக்கா தொடரின் மூன்று காலிறுதிப் போட்டிகள் கோலின்றி முடிவுற்று பெனால்டி சூட்அவுட் முறையில் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் பரகுவே அணியை பிரேசில் வீழ்த்தியதும், கொலம்பியாவை சிலி தோற்கடித்ததும் ஸ்பொட் கிக் மூலமாகும். 

இந்தத் தொடரின் காலிறுதியில் சமநிலை பெற்றால் மேலதிக நேரம் வழங்கப்படாதபோதும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மேலதிக 30 நிமிடங்கள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கோப்பா அமெரிக்க கிண்ணத்தை சாதனை எண்ணிக்கையான 15 தடவைகள் வென்ற உருகுவே கடந்த 2015 தொடரில் காலிறுதியில் சிலியிடம் தோற்று வெளியேறியதோடு 2016 இல் குழுநிலை போட்டிகளிலேயே வெளியேறியது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<