கோப்பா அமெரிக்கா அரையிறுதியில் பிரேசில்

706

பரகுவே அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பெனால்டி சூட்அவுட் முறையில் போராடி வெற்றி பெற்ற பிரேசில் அணி கோப்பா அமெரிக்க கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

பிஃபா உலகக் கிண்ண அடுத்த தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை முன்னேற்றம்

2022 உலகக் கிண்ண தகுதிகாண் ………

இரண்டாம் பாதியில் 10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பரகுவே அணி போர்டா அல்கிரேவில் இன்று (28) நடைபெற்ற காலிறுதியில் முழு நேரம் வரை போட்டியை நடத்தும் பிரேசில் அணிக்கு கடும் சவாலாக இருந்து போட்டியை கோலின்றி சமநிலை செய்தது.  

எனினும், முடிவை தீர்மானிக்கும் பெனால்டியில் பிரேசில் அணியால் 4-3 என போட்டியை வெற்றியீட்ட முடிந்தது. 110 மில்லியன் டொலர்களுக்கு விலைபோன லிவர்பூல் கழகத்தின் நட்சத்திரமான பிரேசில் கோல்காப்பாளர் அலிசன் பெக்கர் பெனால்டி சூட்அவுட்டில் மேற்கொண்ட அபார தடுப்பு பிரேசில் அணியின் வெற்றியை உறுதி செய்தது. 

எனினும், போட்டியின் இரண்டாவது பாதியில் வைத்து பிரேசில் அணிக்கு பெனால்டி ஒன்று வழங்கப்பட்டபோதும் வீடியோ உதவி நடுவர் மூலம் அது மறுக்கப்பட்டது. எனினும், அப்போது தவறிழைத்த பரகுவே வீரர் பெர்பியான் பல்புவனாவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. 

கோப்பா அமெரிக்கா காலிறுதியில் பிரேசில், வெனிசுவேலா

பெரு அணிக்கு எதிராக 5-0 என கோல் மழை …..

பிரேசில் வீரர்கள் எதிரணி கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமித்தபோதும் அந்த அணியால் முழு நேரம் வரை ஒரு கோலைக் கூட புகுத்த முடியாமல் போனது.  

இலங்கை நேரப்படி நாளை (29) நடைபெறும் ஆர்ஜன்டீனா மற்றும் வெனிசுவேலா அணிகளுக்கு இடையிலான காலிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் வரும் செவ்வாய்க்கிழமை பிரேசில் அணி பெலோ ஹொரிசன்டேவில் நடைபெறும் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<