LPL தொழிநுட்ப குழுவின் தலைவராக சரித் சேனாநாயக்க நியமனம்

Lanka Premier League 2021

152

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) இரண்டாவது பருவகால போட்டி தொடருக்கான, தொழினுட்ப குழுவின்  தலைவராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சரித் சேனாநாயக்க இலங்கை அணிக்காக 90களில் விளையாடியிருந்ததுடன், இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 3 டெஸ்ட் மற்றும் 7 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இலங்கை அணிக்காக விளையாடியது மாத்திரமின்றி, சரித் சேனாநாயக்க இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராகவும் செயற்பட்டிருந்தார். 

அதேநேரம் தொழிநுட்ப குழவின் அங்கத்தவர்களாக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வினோதன் ஜோன், முன்னாள் நடுவர் டி.எச். விஜேவர்தன மற்றும் முன்னாள் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் முகாமையாளர் ஷான் பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

லங்கா ப்ரீமியர் லீக்கின் முதல் பருவகால போட்டிகள் கடந்த வருடம் நடைபெற்றதுடன், சம்பியன் பட்டத்தை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிக்கொண்டது. இந்தநிலையில், இந்த பருவகாலத்துக்கான போட்டிகள் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஆகஸ்ட் 22ம் திகதிவரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…