LPL தொடருக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?

Lanka Premier League 2022

240

இலங்கையில் செவ்வாய்க்கிழமை (06) ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யும் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஆரம்ப போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், திங்கட்கிழமை (04) டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளது.

>> பங்களாதேஷ் தொடரில் இருந்து மொஹமட் ஷமி திடீர் விலகல்

எனவே திங்கட்கிழமையிலிருந்து போட்டிகள் நடைபெறவுள்ள அனைத்து நாட்களிலும் டிக்கெட்டுகளை ஹம்பாந்தோட்டை மைதானத்தில் காலை 09.00 மணி முதல் இரவு 05.00 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம் மைதானத்தில் மாத்திரமின்றி இலங்கை கிரிக்கெட் சபையின் www.srilankacricket.lk என்ற இணையத்தின் மூலமாகவும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

>> “தசுன் ஷானகதான் எனக்கு வாய்ப்பை பெற்றுத்தந்தார்” – சரித் அசலங்க!

ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் 300 ரூபாவிலிருந்து 500, 800, 2500, 3000, 7000 மற்றும் 8000 ரூபாவரை விற்பனை செய்யப்படவுள்ளன.

இதேவேளை கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானங்களில் போட்டிகள் ஆரம்பமாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<