அதிர்ச்சித் தோல்விக்கு மத்தியில் அரையிறுதிக்குள் நுழைந்த ரியல் மெட்ரிட்

603
Champions League 11th

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 98ஆவது நிமிடத்தில் பெற்ற பெனால்டி கோல் மூலம், நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, செவில்லா அணியுடனான போட்டியை கோலின்றி சமநிலையாக்கியதன் மூலம் பயேர்ன் முனிச் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்டத்தின் கடைசி இரண்டு காலிறுதிப் போட்டிகளும் நேற்று (11) நடைபெற்றன. இதில் ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராக ஜுவன்டஸ் மூன்று கோல்களை புகுத்தி அதிர்ச்சி வெற்றியை பெற்றபோதும், துரதிஷ்டவசமாக மேலதிக நேரத்தில் எதிரணிக்கு பெனால்டி கோல் ஒன்று சென்றது.  

ரொனால்டோவின் சாகசத்துடன் சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மெட்ரிட் ஆதிக்கம்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் கட்ட..

இதன்படி முதல் கட்ட காலிறுதியில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ரியல் மெட்ரிட் அணியால் 4-3 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் கடைசி நான்கு அணிகளுக்குள் முன்னேற முடிந்தது.

ஏற்கனவே, பார்சிலோன அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ரோமா அணி மற்றும் லிவர்பூல் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் தற்பொழுது அரையிறுதிக்கான நான்கு அணிகளும் தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி போட்டிகளுக்கான அணிகளை பிரிக்கும் குலுக்கல் முறை சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் நாளை (13) நடைபெறவுள்ளது.  

ரியல் மெட்ரிட் எதிர் ஜுவன்டஸ்    

முதல் கட்ட காலிறுதியில் ஆதிக்கம் செலுத்திய ரியல் மெட்ரிட் தனது சொந்த மைதானமான மெட்ரிட் நகரில் இருக்கும் சென்டியாகோ பெர்னாபோ அரங்கில் சோபிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜுவன்டஸ் அணி போட்டி ஆரம்பித்த சில வினாடிகளிலேயே எதிரணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.

போட்டி ஆரம்பித்து ஒரு நிமிடம் மாத்திரம் கடந்த நிலையில் சமி கதிரா பரிமாற்றிய பந்தை ஜுவன்டஸ் வீரர் மரியோ மன்ட்சுகிக் தலையால் முட்டி கோலாக மாற்றினார். சம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில் ரியல் மெட்ரிட் தனது சொந்த மைதானத்தில் போட்டி ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள் விட்டுக்கொடுத்த கோலாக இது இருந்தது. இந்த கோல் இத்தாலி கழகமான ஜுவன்டஸிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

புதுமுக வீரர்களுடன் இலங்கை தேசிய கால்பந்து அணி

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை..

அதற்கு ஏற்ப மீண்டும் செயற்பட்ட மரியோ மன்ட்சுகிக் 37ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை புகுத்தி ஜுவன்டஸை 2-0 என முன்னிலை பெறச் செய்தார். இதன்போது ஸ்டீபன் லிக்ஸ்டெய்ர் கோணர் திசையில் இருந்து உயர அடித்த பந்தை கோல் எல்லைக்கு நெருங்கிய தூரத்தில் இருந்து மன்ட்சுகிக் தலையால் முட்டியபோது ரியல் மெட்ரிட் கோல் காப்பாளர் நாவாஸின் கையில் பட்டும் படாமலும் பந்து வலைக்குள் புகுந்தது.

முதல் பாதியில் ரொனால்டோ, கரெத் பாலே மற்றும் இஸ்கோ உதைத்த ரியல் மெட்ரிட்டின் மூன்று கோல் வாய்ப்புகளை ஜுவன்டஸின் அனுபவ கோல் காப்பாளர் பபோன் அபாரமாக தடுத்தது அந்த அணிக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

முதல் பாதி: ரியல் மெட்ரிட் 0 – 2 ஜுவன்டஸ் 

இரண்டாவது பாதி ஆரம்பமாகும்போது ஜுவன்டஸ் அணி உத்வேகத்தோடு இருந்தது. ரியல் மெட்ரிட் கோல் புகுத்த முயற்சிக்கும் வேளையில் ஜுவன்டஸ் 60ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை புகுத்தியது.

பலைஸ் மடியுடி இடது கோணர் திசையின் விளிம்பில் இருந்து மிக நெருங்கிய தூரத்தில் உதைத்து அந்த கோலை பெற்றார். இதன்மூலம் பார்சிலோனாவுக்கு ரோமா அணி அதிர்ச்சி கொடுத்தது போல் ரியல் மெட்ரிட்டுக்கு அதிச்சி கொடுக்க ஜுவன்டஸுக்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டது. போட்டியின் முழு நேரம் முடியும்போதும் அந்த அணி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.  

எனினும், போட்டியின் மேலதிக நேரத்திற்கு சென்றபோது முழு நாடகம் அரங்கேறியது. அப்போது ரியல் மெட்ரிட் அணிக்கு கோல் ஒன்றை பெற நெருக்கமான வாய்ப்பு ஒன்று கிட்டியபோது பெனால்டி எல்லைக்குள் வைத்து லுகாஸ் வாஸ்குவெஸ் எதிரணி வீரரால் விதி மீறி இடைமறிக்கப்பட்டதால் ரியல் மெட்ரிட் அணிக்கு நடுவர் பெனால்டி உதை ஒன்றுக்கான வாய்ப்பை வழங்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜுவன்டஸ் வீரர்கள் நடுவரை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அந்த அணியின் கோல் காப்பாளரும் அணித் தலைவருமான கியன்லுகி பபோன் நடுவரை தள்ளி மோசமான வார்த்தைகளால் திட்ட, அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.  

பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரோமா அரையிறுதிக்கு தகுதி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்ட..

40 வயதான பபோன் ஆடும் கடைசி சம்பியன் லீக் போட்டியாக இது அமைய அதிக வாய்ப்பு இருக்கும் நிலையில் பரிதாபமாக சிவப்பு அட்டை பெற்று வெளியேறிபோது, அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் பரபரப்பான நேரத்தில் ரொனால்டோ பெனால்டி உதை மூலம் பந்தை வலைக்குள் புகுத்த ரியல் மெட்ரிட் அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. எனினும் இரு கட்ட காலிறுதிப் போட்டிகளினதும் முடிவுகளின்படி, ரியல் மெட்ரிட் அணி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியானது.

இதன்மூலம் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் கோல் புகுத்தி இருக்கும் ரொனால்டோ கடைசியாக ஆடிய 14 போட்டிகளில் பெற்ற மொத்த கோல்களின் எண்ணிக்கையை 27 ஆக உயர்த்திக் கொண்டார்.      

சம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மெட்ரிட் அணி தொடர்ச்சியாக எட்டாவது தடவையாகவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: ரியல் மெட்ரிட் 1 – 3 ஜுவன்டஸ்    

கோல் பெற்றவர்கள்

ரியல் மெட்ரிட் ரொனால்டோ 97′ (பெனால்டி)

ஜுவன்டஸ்மன்ட்சுகிக் 2′, 37′, மடியுடி 60′

சிவப்பு அட்டை

ரியல் மெட்ரிட் பபோன் 93′


பயேர்ன் முனிச் எதிர் செவில்லா

ஜெர்மனி கழகமான பயேர்ன் முனிச் முதல் கட்ட காலிறுதியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையிலேயே தனது சொந்த மைதானத்தில் இரண்டாவது கட்ட காலிறுதியில் ஆடியது.

தொடர்ச்சியாக தனது ஏழாவது சம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் ஆடிய பயேர்ன், ஆட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் ஆதிக்கம் செலுத்தியபோதும் ஒரு கோலைக் கூட பெறவில்லை என்பதோடு ஸ்பெயின் கழகமான செவில்லாவுக்கு எந்த கோலையும் விட்டுக் கொடுக்கவுமில்லை. இதன்மூலம் அந்த அணியால் 2-1 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது.

குறிப்பாக செவில்லா அணி எதிரணியின் வலையை நோக்கி ஒரு தடவை கூட பந்தை உதைக்கவில்லை.

செவில்லா அணி பத்து வீரர்களுடனேயே இந்த போட்டியை முடித்துக் கொண்டது. கடைசி நேரத்தில் முரட்டுத்தனமாக ஆடிய ஜோகியுன் கொர்ரியிக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.  

போட்டியின் நிறைவில் 2013இல் சம்பியன்ஸ் லீக்கை வென்ற பயேர்ன் முனிச் அணி 11ஆவது தடவையாக இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனை விடவும் ரியல் மெட்ரிட் (13) அணி மாத்திரமே அதிக தடவை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முழு நேரம்: பயேர்ன் முனிச் 0 – 0 செவில்லா

சிவப்பு அட்டை கொர்ரி 92′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<