இலங்கை – இந்தியா இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

1154

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள், கொவிட்-19 வைரஸ் உருவாக்கிய அச்ச நிலைமை ஒன்றின் காரணமாக பிற்போடப்பட்டிருக்கின்றது. 

இலங்கை பயிற்றுவிப்பு குழுவில் மேலுமொரு கொவிட் தொற்றாளர்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப்பயிற்சியாளர், தரவு ஆய்வாளர் போன்றோருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையிலையே, இலங்கை – இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் பங்குபெறும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.   

அதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை – இந்திய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 17ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் 24ஆம் திகதி ஆரம்பிக்கவிருக்கின்றது. 

அதோடு இரு அணிகளுக்குமான போட்டிகள் அனைத்தும் இரசிகர்கள் எவரும் இல்லாத நிலையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன. 

புதிய போட்டி அட்டவணை விபரம்

ஒருநாள் தொடர் 

  • முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 17 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 19 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை 21 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்

T20 போட்டி 

  • முதல் T20 போட்டி – ஜூலை 24 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்
  • இரண்டாவது T20 போட்டி – ஜூலை 25 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்
  •  மூன்றாவது T20 போட்டி – ஜூலை 27 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<