செப்டம்பரில் நடைபெறும் இங்கிலாந்து – அவுஸ்திரேலியா தொடர்

150

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் அடுத்த மாதம் (செப்டம்பர்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட இந்த தொடர் கடந்த ஜூலை மாதம் நடைபெறவிருந்த போதும், கொவிட்-19 வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்தது. ஆனாலும், இங்கிலாந்து கிரிக்கெட் சபை கொவிட்-19 வைரஸிற்கு பின்னர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக நடத்தியதுடன், தற்போது பாகிஸ்தான் தொடரையும் நடத்தி வருகின்றது.

பங்களாதேஷ் உயர் செயற்திறன் குழாத்தின் பயிற்றுவிப்பாளராக ரெட்போர்ட் நியமனம்

அதன்படி, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர் எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி T20I போட்டிகளுடன் ஆரம்பமாவதுடன், குறித்த மூன்று போட்டிகளும் சௌதெம்டனில் நடைபெறவுள்ளது. இரண்டாவது T20I மற்றும் மூன்றாவது T20I போட்டிகள் 6ம் மற்றும் 8ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இதனையடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 11, 13 மற்றும் 16ம் திகதிகளில் மென்செஸ்டரில் நடைபெறவுள்ளன.

“இந்த தொடரை நடத்துவதற்கான வழியை பெற்றுக்கொடுத்தமைக்கு அவுஸ்திரேலிய வீரர்கள், ஊழியர்கள் மற்றும் தலைமைத்துவம் என்பவற்றுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கிறோம். அவுஸ்திரேலிய தொடரை நடத்துவது இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு மிக முக்கியமாகும். அத்துடன், இந்த தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு பொருளாதார ரீதியில் நன்மையை கொடுக்கும். நாம், கடினமான சவால்களுக்கு முன்னர், இந்த பணியை தொடருகிறோம்” என இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹெரிசன் தெரிவித்தார்.

இங்கிலாந்தின் தனிமைப்படுத்தல் விடயங்களை கருத்திற்கொண்டு, அவுஸ்திரேலிய குழாம் இம்மாதம் 24ம் திகதி அங்கு பயணிக்கவுள்ளது. ஆஸி. அணி T20 தொடருக்கு முன்னர் டெர்பைஷையருக்கு சென்று, பின்னர் 27ம் திகதி சௌதெம்டன் செல்லவுள்ளது. 

அங்கு செல்லும் ஆஸி அணி, தங்களின் குழாத்துக்குள்ளான ஒரு 50 ஓவர்கள் பயிற்சிப் போட்டி மற்றும் மூன்று T20 பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை 21 வீரர்கள் கொண்ட குழாத்தையும் அறிவித்துள்ளது. இந்த குழாத்தில், அறிமுக வீரர்களான டேனியல் சேம்ஸ், ரெய்லி மெட்ரித் மற்றும் ஜோஸ் பில்லிப் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆரம்பத்தில் 26 வீரர்கள் கொண்ட முதன்மை குழாம் ஒன்றை பெயரிட்டு, பயிற்சிகளை ஆரம்பித்திருந்தது. இந்த குழாத்திலிருந்து, ட்ராவிஷ் ஹெட், உஸ்மான் கவாஜா, பென் மெக்டெர்மோர்ட், மைக்கேல் நீசர் மற்றும் டி ஆர்சி ஷோர்ட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா குழாம்

ஆரோன் பின்ச் (தலைவர்) ஷீன் எபோட், அஷ்டன் ஆகர், அலெக்ஸ் கெரி, பெட் கம்மின்ஸ் (உப தலைவர்), ஜோஸ் ஹெஷல்வூட், மார்னஸ் லெபுசெங், நெதன் லையோன், மிச்சல் மார்ஷ், க்ளேன் மெக்ஸ்வேல், ரிலே மெரிடித், ஜோஸ் ப்லிப், டேனியல் சேம்ஸ், கேன் ரிச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், அன்ரு டை, மெதிவ் வேட், டேவிட் வோர்னர், அடம் ஷாம்பா

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க