இலங்கை கிரிக்கெட் அணியில் மேலும் இருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று

245

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற சகலதுறைவீரர்களான சாமிக்க கருணாரட்ன மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோருக்கு கொவிட்-19 வைரஸ் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜப்னாவின் வெற்றியை இலகுவாக்கிய சதீர ; சுழல் பந்துவீச்சில் அசத்திய தரங்க!

அந்தவகையில் இளம் வேகப்பந்துவீச்சாளரான நுவன் துஷாரவிற்கு அடுத்ததாக இலங்கை கிரிக்கெட் அணியில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளான வீரர்களாக சாமிக்க கருணாரட்ன மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இனம் காணப்பட்டிருக்கின்றனர்.

எனினும் நோய் நிலைமைகள் சீராகும் பட்சத்தில் தற்போது கொவிட்-19 தொற்றுக்கு ஆளான வீரர்கள் இலங்கை அணியில் இணைந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது நோய்த் தொற்றுக்கு ஆளான வீரர்கள் இருவரும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துனித்தின் சாதனை சதத்தால் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை U19 அணி

இதேநேரம் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் பங்கெடுக்கும் 5 போட்டிகள் கொண்ட T20I தொடரானது, இம்மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<