Home Tamil துனித்தின் சாதனை சதத்தால் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை U19 அணி

துனித்தின் சாதனை சதத்தால் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை U19 அணி

துனித் அபார சதத்தால் தென்னாபிரிக்காவை வென்றது இலங்கை

6689
South Africa U19 vs Sri Lanka U19

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகின்ற ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5ஆவது இடத்தை தெரிவு செய்வதற்கான முதலாவது அரை இறுதியில் இலங்கை 19 வயதின்கீழ் அணி 65 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லாலகேவின் அபார சதம், ரனுத சோமரத்னவின் அரைச்சதம் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆகியோர் அளித்த அதிகப்பட்ச பங்களிப்பு என்பன இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தன.

ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 5ஆம் இடத்திலிருந்து 8ஆம் இடம்வரையான சுபர் லீக் நிரல்படுத்துக்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்காவை எதிர்கொண்டது.

அண்டிகுவாவில் உள்ள சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (30) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லாலகே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணிக்கு ஆரம்பத்திலேயே குவென மெப்பாக்கா நெருக்கடி கொடுத்தார். இதனால், இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான சதீஷ ராஜபக்ஷவின் விக்கெட் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், சமிந்து விக்ரமசிங்க 8 ஓட்டங்கள் பெற்ற நிலையிலும் பறிபோனது.

தொடர்ந்து புதிய வீரராக மைதானம் வந்த சகுன லியனகே ஓட்டம் எதுவுமின்றி ஓய்வறை திரும்பினார்.

இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லாலகே நிலைத்து நின்று ஆடினார்.

இதில் துனித் வெல்லாலகேவுடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரனுத சோமரத்ன சிறப்பாக ஆடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட துனித் வெல்லாலகே சதமடித்து அசத்தினார். இளையோர் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய முதலாவது சதத்தையும் பதிவுசெய்த அவர், ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் சதமடித்த முதலாவது இலங்கை அணித்தலைவராகவும், 9ஆவது இலங்கை வீரராகவும் இடம்பிடித்தார்.

இதனிடையே, 5வது விக்கெட்டுக்கு துனித் வெல்லாலகே – ரனுத சோமரத்ன ஜோடி சத இணைப்பாட்டத்தை மேற்கொண்டு 130 ஓட்டங்களைக் குவித்தது. இதில் துனித் வெல்லாலகே 130 பந்துகளில் 113 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் 4 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும்.

இதன்மூலம் இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக உபுல் தரங்கவுக்குப் பிறகு (2004) அதிக ஓட்டங்களைக் குவித்த 2ஆவது இலங்கை வீரராக அவர் இடம்பிடித்தார்.

எனினும், ரனுத சோமரத்ன கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களைக் குவிக்க, இலங்கை 19 வயதின்கீழ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் குவென மெப்பாக்கா 3 விக்கெட்டுகளையும், மெதிவ் போஸ்ட் 2 விக்கெட்டுகளையும், டீவல்ட் ப்ரவிஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் 233 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க 19 வயதின்கீழ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேட் ஸ்மித் ஒரு ஓட்டத்துடன் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்க, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரான டிவோல்ட் பிரேவிஸ் வனுஜ சஹனின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அடுத்துக் களமிறங்கிய கேஹார்டஸ் மெரீ, ரோனன் ஹர்மனுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர். எனினும், ரோனன் ஹர்மன் ட்ரவின் மெதிவ்வின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த அணித்தலைவர் ஜோர்ஜ் வென் ஹேர்டன் (3), கேடன் சொலமன்ஸ் (4) ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஓய்வறை திரும்பினர்.

எனினும், அந்த அணிக்காக கேஹார்டஸ் மெரீ 44 ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்த்தாலும், பின்வரிசை வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறி விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்

இறுதியில் தென்னாபிரிக்க 19 வயதின்கீழ் அணி 37.3 ஓவர்கள் நிறைவில் 167 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியினை சந்தித்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் ட்ரவின் மெதிவ், ரவீன் டி சில்வா மற்றும் ஷெவோன் டேனியில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும், துனித் வெல்லாலகே, தனுஜ சஹன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அணியின் வெற்றியினை உறுதி செய்தனர்.

எனவே, இந்தப் போட்டியின் சதமடித்து இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அணித்தலைவர் துனித் வெல்லாலகே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதுமாத்திரமின்றி, இளையோர் உலகக் கிண்ண அத்தியாயம் ஒன்றில் 200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து 15 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் அவர் நிலைநாட்டினார். இதுவரை அவர் இந்தப் போட்டித் தொடரில் 224 ஓட்டங்களையும், 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இம்முறை ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் 5ஆவது இடத்தை பெற்றுக்கொள்ளும் அணி எது என்பதை தீர்மானிக்கின்ற இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியது.

இதன்படி, பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று (31) நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதிப்போட்டியில் வெற்றிபெறுகின்ற அணியுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<


Result


South Africa U19
167/10 (37.3)

Sri Lanka U19
232/6 (50)

Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe b Kwena Maphaka 8 15 0 0 53.33
Sadisha Rajapaksa b Kwena Maphaka 5 19 0 0 26.32
Shevon Daniel c Asakhe Tsaka b Matthew Boast 29 54 4 0 53.70
Sakuna Nidarshana Liyanage c Andile Simelane b Matthew Boast 0 8 0 0 0.00
Dunith Wellalage c Michael Copeland b Kwena Maphaka 113 130 9 4 86.92
Ranuda Somarathne not out 57 70 3 2 81.43
Vinuja Ranpul c Andile Simelane b Dewald Brevis 6 4 0 1 150.00
Raveen De Silva not out 0 1 0 0 0.00


Extras 14 (b 0 , lb 6 , nb 1, w 7, pen 0)
Total 232/6 (50 Overs, RR: 4.64)
Fall of Wickets 1-14 (5.2) Sadisha Rajapaksa, 2-17 (5.5) Chamindu Wickramasinghe, 3-25 (8.3) Sakuna Nidarshana Liyanage, 4-87 (25.3) Shevon Daniel, 5-217 (48.4) Dunith Wellalage, 6-232 (49.5) Vinuja Ranpul,

Bowling O M R W Econ
Matthew Boast 9 0 21 2 2.33
Kwena Maphaka 10 1 60 3 6.00
Michael Copeland 10 0 35 0 3.50
Andile Simelane 5 0 21 0 4.20
Dewald Brevis 10 0 52 1 5.20
Asakhe Tsaka 6 0 37 0 6.17


Batsmen R B 4s 6s SR
Jade Smith run out (Dulith Wellalage) 1 6 0 0 16.67
Ronan Hermann c Chamindu Wickramasinghe b Treveen Mathews 34 40 3 1 85.00
Dewald Brevis lbw b Wanuja Sahan 6 12 1 0 50.00
Gerhardus Maree c Raveen De Silva b Dulith Wellalage 44 43 7 0 102.33
George Van Heerden c Chamindu Wickramasinghe b Treveen Mathews 3 12 0 0 25.00
Kaden Solomons lbw b Shevon Daniel 4 7 0 0 57.14
Andile Simelane run out (Raveen De Silva) 20 26 0 1 76.92
Michael Copeland b Ravindu De Silva 20 27 2 0 74.07
Matthew Boast st Anjala Bandara b Ravindu De Silva 14 24 2 0 58.33
Asakhe Tsaka not out 9 20 0 0 45.00
Kwena Maphaka st b Shevon Daniel 8 9 0 0 88.89


Extras 4 (b 0 , lb 1 , nb 1, w 2, pen 0)
Total 167/10 (37.3 Overs, RR: 4.45)
Fall of Wickets 1-8 (2.3) Jade Smith, 2-26 (6.5) Dewald Brevis, 3-54 (11.5) Ronan Hermann, 4-66 (15.1) George Van Heerden, 5-72 (16.4) Kaden Solomons, 6-112 (22.6) Gerhardus Maree, 7-117 (24.6) Andile Simelane, 8-148 (32.1) Michael Copeland, 9-152 (34.2) Matthew Boast, 10-167 (37.3) Kwena Maphaka,

Bowling O M R W Econ
Wanuja Sahan 7 1 29 1 4.14
Vinuja Ranpul 4 0 25 0 6.25
Treveen Mathew 10 1 41 2 4.10
Dunith Wellalage 6 0 29 1 4.83
Shevon Daniel 5.3 0 28 2 5.28
Raveen De Silva 5 0 14 2 2.80