பெண்களுக்கான ஐ.பி.எல் தொடரில் சமரி, சசிகலா பங்கேற்பு

235

இந்திய கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வருடத்துக்கான பெண்களுக்கான சேலஞ்ச் கிண்ண T20 கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியான சசிகலா சிறிவர்தன மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவியான  சமரி அத்தபத்து ஆகிய இருவரும் பங்கேற்கவுள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.பி.எல் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறுகின்ற பெண்களுக்கான சேலஞ்ச் கிண்ண T20 கிரிக்கெட் போட்டித் தொடர் நவம்பர் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.

அடுத்த வாரம் ஆரம்பமாகும் இராணுவ தளபதி T20 லீக்

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐ.பி.எல் தொடரின் பிளே-ஓப் (playoff) சுற்று நடைபெறும்போது இந்த போட்டித் தொடர் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கும்படி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சசிகலா சிறிவர்தன மற்றும் சமரி அத்தபத்து ஆகிய இருவருக்கும் BCCI இனால் விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியான 35 வயதுடைய சசிகலா சிறிவர்தன, சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். சகலதுறை வீராங்கனையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த அவர், 81 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதனிடையே, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், தற்போதைய தலைவியுமான 30 வயதுடைய சமரி அத்தபத்து, கடந்த வருடம் நடைபெற்ற சேலஞ்ச் கிண்ண T20 கிரிக்கெட் போட்டித் தொடரில் சுப்பர்நோவர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

Video – Dhoni இன் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்ன? | Cricket Galatta Epi 39

இதன்படி, இலங்கை வீராங்கனைகள் இம்மாத இறுதியில் டுபாய் நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும், அங்கு 6 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வீராங்கனைகள் தலைமையில் 3 அணிகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும். இதன்படி, நான்கு போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட்டின் உற்சாக பான பங்குதாரர்களாகிய ரெட் புல்

இதேநேரம், இத்தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த பருவத்தில் பங்கேற்ற சோபி எக்லெஸ்டன், டொனி வியாட் மீண்டும் களமிறங்கலாம் எனவும் பிரான் வில்சன், லாரன் வின்பீல்டு-ஹில், சோபியா டங்க்லே, அனியா ருப்சோல், கேட் கிராஸ் ஆகியோரும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பங்களாதேஷ் T20 மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியான சல்மா காதுன் மற்றும் வேகப் பந்துவீச்சாளரான ஜஹனா அலாமுக்கும் இந்தத் தொடரில் பங்கேற்க BCCI அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<