உலகக் கிண்ணத்திற்கு முன்னர் முத்தரப்பு T20 தொடரில் ஆடும் நியூசிலாந்து

129

அவுஸ்திரேலிய மண்ணில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகும் விதத்தில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் பங்குபெறும் முத்தரப்பு T20 தொடரில் ஆடவிருக்கின்றது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தமது சொந்த மண்ணில் (Home Season) இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இருந்து ஆடும் கிரிக்கெட் தொடர்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. இவ்வாறு வெளியிடப்பட்ட கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையில் முதலாவது தொடராக நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கெடுக்கும் முத்தரப்பு T20 தொடரானது அமைகின்றது.

இந்த T20 தொடர் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த முத்தரப்பு தொடரின் பின்னர் T20 உலகக் கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலியா பயணிக்கும் நியூசிலாந்து அணி, T20 உலகக் கிண்ணத் தொடரினை அடுத்து இந்திய அணியினை நவம்பர் மாத இறுதியில் தமது சொந்த மண்ணில் வைத்து எதிர்கொள்கின்றது.

இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெறவிருக்கின்றன. அதேநேரம் இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடர்களின் பின்னர்,  அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தினை ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கிற்காக நியூசிலாந்து அணி தமது சொந்த மண்ணில் வைத்து எதிர்கொள்கின்றது.

இங்கிலாந்துடன் ஒரு பகலிரவு டெஸ்ட் அடங்கலாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ள நியூசிலாந்து, அதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியினை மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முரளி-வோர்ன் கிண்ணத்தை தம்வசப்படுத்துமா இலங்கை?

முத்தரப்பு T20 தொடர் (நியூசிலாந்து அணியின் போட்டிகள்)

ஒக்டோபர் 08, 2022 –  எதிர் பாகிஸ்தான் – கிறைஸ்ட்சேர்ச்

ஒக்டோபர் 09, 2022 –  எதிர் பங்களாதேஷ் – கிறைஸ்ட்சேர்ச்

ஒக்டோபர் 11, 2022 –  எதிர் பாகிஸ்தான் – கிறைஸ்ட்சேர்ச்

ஒக்டோபர் 12, 2022 –  எதிர் பங்களாதேஷ் – கிறைஸ்ட்சேர்ச்

ஒக்டோபர் 14, 2022 – முத்தரப்பு T20 தொடர் இறுதிப் போட்டி (தெரிவாகும் சந்தர்ப்பத்தில்) – கிறைஸ்ட்சேர்ச்

எதிர் இந்தியா

நவம்பர் 18 – முதல் T20 போட்டி – வெலிங்டன்

நவம்பர் 20 – இரண்டாவது T20 போட்டி – மவுண்ட் மங்னாய்

நவம்பர் 22 – மூன்றாவது T20 போட்டி – நேப்பியர்

நவம்பர் 25 – முதல் ஒருநாள் போட்டி – ஒக்லேன்ட்

நவம்பர் 27 – இரண்டாவது ஒருநாள் போட்டி – ஹமில்டன்

நவம்பர் 30 – மூன்றாவது ஒருநாள் போட்டி – கிறைஸ்ட்சேர்ச்

எதிர் இங்கிலாந்து

பெப்ரவரி 16-20, 2023 – முதல் டெஸ்ட் (பகலிரவு) – மவுண்ட் மங்னாய்

பெப்ரவரி 24-28, 2023 – இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு) – வெலிங்டன்

எதிர் இலங்கை

மார்ச் 09-13, 2023 – முதல் டெஸ்ட் போட்டி – கிறைஸ்ட்சேர்ச்

மார்ச் 17-21, 2023 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – வெலிங்டன்

மார்ச் 25, 2023 – முதல் ஒருநாள் போட்டி – ஒக்லேன்ட்

மார்ச் 28, 2023 – இரண்டாவது ஒருநாள் போட்டி – கிறைஸ்ட்சேர்ச்

மார்ச் 31, 2023 – மூன்றாவது ஒருநாள் போட்டி – ஹமில்டன்

ஏப்ரல் 02, 2023 – முதல் T20I போட்டி – ஒக்லேன்ட்

ஏப்ரல் 05, 2023 – இரண்டாவது T20I போட்டி – டனேடின்

ஏப்ரல் 08, 2023 – மூன்றாவது T20I போட்டி – குயின்ஸ்டவ்ன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<