இறுதிப் போட்டியில் இறுதிப் பந்தில் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள்

75
Cricket Bowlers

கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை விக்கெட்டுக்கள் எடுப்பதே அவர்களது பிரதான நோக்கமாக இருக்கும். ஆனால், பந்துவீச்சாளர்களுக்கு தாங்கள் வீசும் எல்லாப் பந்துகளிலும் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைக்காது. இதற்காக பந்துவீச்சாளர்கள் மிகவும் கடினமான முயற்சிகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.  

தலைவர்களாக ஜொலித்து உலகக் கிண்ணத்தை வெல்லாதவர்கள்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஏராளமான தலைவர்கள் வெற்றி பெறுவதை

விடயங்கள் இப்படி இருக்க, கிரிக்கெட் உலகினை நடுங்க வைத்த சில பந்துவீச்சாளர்கள் இறுதியாக தாம் விளையாடிய குறிப்பிட்ட வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தாம் இறுதியாக வீசிய பந்தில் விக்கெட்டுக்களைச் சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

அப்படியான பந்துவீச்சாளர்கள் சிலரை நாம் இங்கு நோக்குவோம். 

கிளேன் மெக்ராத்

Mcgrath
Getty Images

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து நட்சத்திரமான கிளேன் மெக்ராத், தனது நாடு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிகரமான அணியாக வலம்வர பல்வேறு வகைகளிலும் பங்களிப்புச் செய்தார் என்றால் அது மிகையாகாது. 

இவ்வாறு தனது நாட்டுக்கு ஒரு நட்சத்திர வீரராக பங்களிப்புச் செய்த கிளேன் மெக்ராத் தான் விளையாடிய இறுதி டெஸ்ட் போட்டியிலும், இறுதி T20 சர்வதேச போட்டியிலும் தான் வீசிய இறுதிப் பந்தில் விக்கெட் எடுத்திருக்கின்ற ஒரே வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

வரலாற்றில் இரண்டாவது T20 சர்வதேச போட்டி 2005ஆம் ஆண்டு நடைபெற்றிருந்தது. இங்கிலாந்தின் சௌத்தம்ப்டன் நகரில் இடம்பெற்ற இந்த போட்டியே மெக்ராத்தின் இறுதி T20 சர்வதேச போட்டியாகும். இப்போட்டியில் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதிய நிலையில், இப்போட்டியில் மெக்ராத் தான் வீசிய இறுதிப் பந்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான போல் கொலிங்வூட்டின் விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், துரதிஷ்டவசமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மெக்ராத்தின் இறுதி T20 சர்வதேச போட்டியில் தோல்வியினை தழுவியிருந்தது.  

உலகிற்கு மறைந்திருந்த சனத் மற்றும் டில்ஷான்

பந்துவீச்சாளர்களாக அறிமுகமாகி பின்னர் கிரிகெட் உலகின் துடுப்பாட்ட ஜாம்பவான்கள்.

அதேநேரம், மெக்ராத்திற்கு கடந்த 2007ஆம் ஆண்டு சிட்னியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியே இறுதி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய ஜேம்ஸ் அன்டர்சனின் விக்கெட்டினைக் கைப்பற்றிய மெக்ராத், தான் விளையாடிய இறுதி டெஸ்ட் போட்டியில், தான் வீசிய இறுதிப் பந்தில் விக்கெட் ஒன்றினை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறினார். மெக்ராத் விளையாடிய இறுதி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இன்னும் கிளேன் மெக்ராத், தான் விளையாடிய இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் தான் வீசிய இறுதிப்பந்திற்கு முன்னர் போட்ட (அதாவது ஓவர் ஒன்றின் 5ஆவது) பந்தில் விக்கெட் எடுத்திருப்பதும் முக்கிய அம்சமாகும். மெக்ராத் இந்த விக்கெட்டினை 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையின் சகலதுறை வீரர் ரசல் அர்னோல்டினை வீழ்த்தி எடுத்தது குறிப்பிடத்தக்கது.  

முத்தையா முரளிதரன்

Murali
AFP

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் ஜாம்பவனான, முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1,347 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக உலக சாதனை செய்திருக்கின்றார். 

யாரும் எட்ட முடியாத சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரனாக இருக்கும் முரளிதரன் தான் விளையாடிய இறுதி டெஸ்ட் போட்டியில் வீசிய இறுதிப் பந்தில் விக்கெட் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முரளிதரன் தனது இறுதி டெஸ்ட் போட்டியினை கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக காலியில் வைத்து விளையாடியிருந்தார். இப்போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணியின் இறுதி துடுப்பாட்டவீரரான பிரக்யான் ஓஜாவின் விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலம் முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் இறுதியாக வீசிய பந்து ஒன்றில் விக்கெட்டினை கைப்பற்றிய வீரராக மாறினார். 

அதோடு, இந்த விக்கெட் டெஸ்ட் போட்டிகளில் முரளிதரனின் 800ஆவது விக்கெட்டாகவும் இருந்தது. இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்கள் எடுத்த முதல் பந்துவீச்சாளராகவும் முரளிதரன் சாதனை செய்தார். 

இதோடு, முரளிதரனின் பந்துவீச்சு காரணமாக 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற குறித்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினை பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

லசித் மாலிங்க

Malingaமுரளிதரன் போன்று இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு நட்சத்திர பந்துவீச்சாளராக இருக்கும் லசித் மாலிங்க தனது யோக்கர்கள் மூலம் எப்போதும் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் உருவாக்கும் பந்துவீச்சாளராகவும் காணப்படுகின்றார்.   

அயன் மேன் திசர பெரேரா!

கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற T20 உலகக் கிண்ண தொடருக்கு முன்னர் இலங்கை அணி

கடந்த 2010ஆம் ஆண்டில் முரளியுடன் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற லசித் மாலிங்க, மட்டுத்தப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையல் மாலிங்க, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தான் வீசிய இறுதிப் பந்தில் விக்கெட் ஒன்றினை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

மாலிங்க சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறாமல் விட்டாலும் 2019ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்தார். அதன்படி, மாலிங்கவின் இறுதி ஒருநாள் போட்டியாக கடந்த ஆண்டின் ஜூலை மாதம் பங்களாதேஷிற்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற ஒருநாள் போட்டி அமைந்தது. இப்போட்டியில் லசித் மாலிங்க, தான் வீசிய இறுதிப் பந்தில் முஸ்தபிசுர் ரஹ்மானை ஆட்டமிழக்கச் செய்ததோடு ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒன்றின் இறுதிப் பந்தில் விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் மாறியிருந்தார். 

இது மட்டுமின்றி மாலிங்க தனது இறுதி சர்வதேச போட்டியில் தனது அபார பந்துவீச்சு மூலம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

றிச்சர்ட் ஹட்லி

Hadley
Getty Images

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக என்பதுகளில் சகலதுறைகளிலும் அசத்திய வீரர்களில் ஒருவராக கிரிக்கெட் வர்ணனையாளரான றிச்சர்ட் ஹட்லி காணப்படுகின்றார்.  

டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் 400 விக்கெட்டுக்கள் என்கிற மைல்கல்லை தன்னுடைய மிரளவைக்கும் வேகப்பந்துவீச்சு மூலம் முதலில் எட்டிய ஹட்லி, தன்னுடைய 39ஆவது அகவையில் ஓய்வினை அறிவித்தார். ஹட்லியும், முரளிதரன், மெக்ராத் போன்று தான் விளையாடிய இறுதி டெஸ்ட் போட்டியில் இறுதி பந்தில் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணிக்கு எதிராக 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் ஹட்லி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய பின்வரிசை வீரர் டெவோன் மால்கோமின் விக்கெட்டினைக் கைப்பற்றி, தான் விளையாடிய இறுதி டெஸ்ட் போட்டியில் இறுதிப் பந்தில் விக்கெட் எடுத்த வீரராக மாறியிருந்ததது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க