மிலரின் தலைமைப் பதவி விஜேயிற்கு

169
David Miller
 

எஞ்சியிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வழிநடாத்தும் பொறுப்பு டேவிட் மிலரிடம் இருந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜேயிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த டேவிட் மிலரின் தலைமையில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் விளையாடிய  6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்தமை மற்றும் 6 போட்டிகளில் மிலர் வெறுமனே 76 ஓட்டங்களை மட்டுமே பெற்றதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் வலிமை மிக்க அதிரடித் துடுப்பாட்ட வீரரான டேவிட் மிலர் தொடர்ந்தும் அணியில் ஒரு வீரராக விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்