கடைசி தறுவாயில் கோல்பெற்று பூட்டா னை வீழ்த்திய இலங்கை மகளிர்

389

பூட்டான், திம்பு தேசிய அரங்கில் நடைபெற்ற பூட்டான் பெண்கள் கால்பந்து அணியுடனான நட்புறவு கால்பந்து போட்டியில் 91 ஆவது நிமிடத்தில் பிரவீனா பெரேரா பெற்ற கோல் மூலம் இலங்கை பெண்கள் கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில்வெற்றியீட்டியது.  

உலகக் கிண்ண தகுதி காண் இரண்டாம் சுற்றில் இலங்கை H குழுவில்

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ……

இந்த ஆண்டு கடைசியில் நேபாளத்தில் நடைபெறவிருக்கும் தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான ஏற்பாட்டின் ஓர் அங்கமாகவே இலங்கை அணி பூட்டான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தேசிய அணியுடன் நட்புறவு போட்டியில் ஆடியது

எனினும், அந்நாட்டு காலநிலைக்கு பழக்கப்படுவதற்கு இலங்கை அணி தடுமாற்றம் கண்ட நிலையில் போட்டியின் ஆரம்பத்தில் பூட்டான் வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். பூட்டான் அணி மொத்தம் 4 உதைகளை கோலை நோக்கி செலுத்தியதோடு ஒன்றே இலக்கை நோக்கிச் சென்றது. மறுபுறம் 91 ஆவது நிமிடத்தில் இலங்கை அணி மேற்கொண்ட ஒரே இலக்கை நோக்கிய உதை வெற்றி கோலாக மாறியது.  

இலங்கை வீராங்கனைகள் தமது நிலையை தக்கவைத்து ஆடியதோடு மத்திய களத்தில் பந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த எரன்தி லியனகே மற்றும் துஷானி மதூஷிகா தொடர்ச்சியாக எதிரணியினரில் அரணை முறியடித்ததை காண முடிந்தது.   

Road to Barcelona நிகழ்வுக்கு இம்முறையும் இலங்கையில் இருந்து எட்டுப் பேருக்கு வாய்ப்பு

உலகின் பிரபல கால்பந்து கழகமான ……

பெனால்டி பெட்டிக்கு சற்று வெளியால் ப்ரீ கிக் ஒன்று கிடைத்தபோது பூட்டான் அணி 52 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் அந்த பந்து அயோமி விஜேரத்தனவினால் தடுக்கப்பட்டு கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. பட்டுவந்த பந்தை ட்ஷெரிஹ் யங்டன் தலையால் முட்டியபோதும் அது வெளியே பறந்தது.  

ஆயோமி மற்றும் அச்சலா சன்ஜீவனி இருவரும் ஒரே இலக்கை நோக்கி சென்றபோது 63 ஆவது நிமிடத்தில் வாய்ப்பு ஒன்று ஏற்பட்டது. கோலை நோக்கிய உதை நட்காவான் யங்சனினால் முறியடிக்கப்பட்டதோடு திரும்பி வந்த பந்தையும் யங்டன் தடுத்தார்.  

போட்டி சமநிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, ப்ரவீனா பெரேரா தற்காப்பு வலயத்திற்கு பின்னால் இருந்து பெனால்டி பகுதியை நோக்கி சென்று திலினி ஜயசிங்க பரிமாற்றிய பந்தை கோலாக மாற்றினார்.    

கோல் பெற்றவர் 

இலங்கைப்ரவீன பெரேரா 90+1’

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<