இறுதி டி20 யில் சுப்பர் ஓவரில் வெற்றியை தனதாக்கிய ஜிம்பாப்வே

152
©ESPNcricinfo
 

இரு அணிகளின் கைகளுக்கும் மாறி மாறி சென்ற போட்டியில் இறுதியில் அமைந்த இலகு வெற்றியை கைவிட்ட ஜிம்பாப்பே அணி சுப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்று இரு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை சமநிலையில் நிறைவு செய்துள்ளது.  

மேவரின் அதிரடியால் முதல் டி20 போட்டியில் நெதர்லாந்துக்கு வெற்றி

ரோலொப் வென் டர் மேவரின் அதிரடியான ……..

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்குமிடையிலான இருதரப்பு தொடரின் இறுதி டி20 சர்வதேச போட்டி நேற்று (25) ரொட்டர்டமில் நடைபெற்றது

முதல் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்றைய போட்டிக்கு நெதர்லாந்து அணியில் ஒரு மாற்றமும், ஜிம்பாப்வே அணியில் இரு மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மெக்ஸ் ஓடௌட் அரைச்சதம் கடந்து 40 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அணித்தலைவர் பீட்டர் சீலர் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஏனைய வீரர்கள் எவரும் குறிப்பிடக்கூடிய அளவுக்கு பெரிதாக பிரகாசிக்கவில்லை.

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் சேன் வில்லியம்ஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் முப்போ 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், கெயில் ஜர்விஸ், ரயன் பேர்ல், சிகன்டர் ராஸா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதமும் வீழ்த்தினர்

பின்னர் 153 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நல்ல ஆரம்பத்தை பெற்றது. ஆனால் இறுதி நேரத்தில் நெதர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சு, களத்தடுப்பு காரணமாக விக்கெட்டுகளை பறிகொடுத்து வெற்றியை இழக்க  போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.    

துடுப்பாட்டத்தில் அதிக பட்ச ஓட்டங்களாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய விக்கெட் காப்பாளர் பிரெண்டன் டைலர் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 24 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும், இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய எல்டன் சிக்கம்புரா மூன்று சிக்ஸர்களுடன் 18 பந்துகளில் 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் ரோலொப் வென் டர் மேவர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், போல் வென் மீகிரன் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பிரெண்டன் க்ளோவர் மற்றும் பீட்டர் சீலர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.   

அரையிறுதிக்கு சென்ற போதிலும் கவனமாக இருப்போம்: ஸ்டார்க்

இங்கிலாந்து அணியினை நேற்று (26) லண்டன் ……….

போட்டி சமநிலையை அடைந்ததால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சுப்பர் ஓவர் போட்டி நடாத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 18 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

ஆறு பந்துகளில் 19 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நெதர்லாந்து ஒரு விக்கெட்டையும் இழந்து 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி சுப்பர் ஓவர் முறையில் போட்டியில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் இரு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் 1-1 என சமநிலையில் நிறைவுக்கு வந்தது.    

போட்டியின் சுருக்கம்

நெதர்லாந்து 152/8 (20) – மெக்ஸ் ஓடௌட் 56 (40), பீட்டர் சீலர் 29 (20), சேன் வில்லியம்ஸ் 2/28 (4), கிறிஸ் முப்போ 2/39 (4) 

ஜிம்பாப்வே 152/10 – பிரெண்டன் டைலர் 40 (24), எல்டன் சிக்கம்புரா 29 (18), ரோலொப் வென் டர் மேவர் 4/35 (4), போல் வென் மீகிரன் 3/25 (4) 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<