இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ள வெல்லாலகே

Pakistan tour of Sri Lanka 2022

628

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளார்.

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளைய தினம் (24) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராகும் ஜொனதன் ட்ரொட்

இந்தப்போட்டிக்கு முன்னதான ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. குறித்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன துனித் வெல்லாலகேவின் டெஸ்ட் அறிமுகம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுத் கருணாரத்ன குறிப்பிடுகையில், “மஹீஷ் தீக்ஷனவுக்கு பதிலாக துனித் வெல்லாலகே அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், நாம் பெயரிட்டுள்ள 12 வீரர்களில் அசித பெர்னாண்டோ இடம்பெற்றுள்ளார். இந்த இரண்டு மாற்றங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என்றார்.

துனித் வெல்லாலகே அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேசிய அணியின் அறிமுகத்தை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், நாளைய தினம் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<