மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்!

New Zealand tour of England 2023

103
New Zealand tour of England 2023

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருாநாள் தொடரையடுத்து சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்திருந்தார்.

>>கொழும்பு அணியை வீழ்த்தி பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியது கோல் டைட்டன்ஸ்!

எனினும் நடப்பு உலகக்கிண்ண சம்பியனான இங்கிலாந்து அணி மீண்டும் கிண்ணத்தை தக்கவைக்கும் முகமாக அணியை பலப்படுத்தி வருவதுடன், மீண்டும் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.

நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக ஜோஸ் பட்லர் செயற்படவுள்ளதுடன் மொயீன் அலி, ஜொனி பெயார்ஸ்டோவ், ஜோ ரூட், லியம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷீட், கிரிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வூட் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் ஒருநாள் குழாத்தில் உலகக்கிண்ணத்தில் விளையாடக்கூடிய பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதிகம் பேசப்பட்டுவந்த ஜொப்ரா ஆர்ச்சர் அணியில் இணைக்கப்படவில்லை.

அதுமாத்திரமின்றி உபாதையிலிருந்து மீண்டுவரும் ஜொப்ரா ஆர்ச்சர் நியூசிலாந்து தொடரில் மாத்திரமின்றி உலகக்கிண்ணத்துக்கான குழாத்திலும் இடம்பெற மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் லுக் ரைட் தெரிவித்துள்ளார்.

>>WATCH – சம்ஷி, சீகுகேவின் அபார பந்துவீச்சுடன் கோல் அணிக்கு அசத்தல் வெற்றி | LPL 2023

ஜொப்ரா ஆர்ச்சர் உலகக்கிண்ணத்தொடருக்கான குழாத்தில் இடம்பெற மாட்டார் எனவும், எனினும் தொடருக்காக மேலதிக வீரராக இந்தியாவுக்கு பயணிப்பார் எனவும் லுக் ரைட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 8ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ஒருநாள் குழாம்

ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜேசன் ரோய், ஜொனி பெயார்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லியம் லிவிங்ஸ்டன், செம் கரன், மொயீன் அலி, ஆதில் ரஷீட், டேவிட் வில்லி, கிரிஸ் வோக்ஸ், ரீஷ் டொப்லே, மார்க் வூட், கஸ் அட்கின்சன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<