இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சொத்து விபரங்களை வெளியிடுவதாக அறிவிப்பு

842
Lankan cricketers voluntarily

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் தமது சொத்து விபரங்களை ஒவ்வொரு வருடமும் வெளியிடுவதற்கு முன்வந்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தொண்ணூறுகளின் இறுதி நாயகனுக்கு விடைகொடுக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டி

உலகின் அதிகூடிய டெஸ்ட் விக்கெட்டுகளை..

அத்துடன், ஏனைய விளையாட்டு சங்கங்களில் பதவி வகிக்கின்ற அதிகாரிகள், பயிற்சியாளர்கள், அந்தந்த வீரர்களையும் அரச ஊழியர்களாகக் கருதி அவர்களை இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

நாட்டில் ஏற்பட்ட திடீர் அரசியல் திருப்பத்தினை அடுத்து பைஸர் முஸ்தபா மீண்டும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்களுடனான விசேட சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இலங்கையில் விசாரணைகள் நடத்தப்பட்டுவரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒவ்வொரு வருடமும் ஒப்பந்தம் செய்யப்படுகின்ற வீரர்கள் தாமாகவே தமது சொத்து விபரங்களையும், வருமானங்களையும் வெளிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.  

இதுதொடர்பில் கடந்த வியாழக்கிழமை கிரிக்கெட் வீரர்களுடன் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றது. உண்மையில் இது வரவேற்கத்தக்க விடயமாகும். அதேபோல, ஏனைய கிரிக்கெட் நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது வீரர்களின் இந்த செயற்பாடு சிறந்த முன் உதாரணமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நுவன் சொய்சா மீது ஐ.சி.சி. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு

ஐ.சி.சி.யின் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை..

எனவே, இதன் தொடர்ச்சியாக ஏனைய விளையாட்டு சங்ககங்களில் பதவி வகிக்கின்ற அதிகாரிகளையும், அந்தந்த வீரர்களையும் அரச ஊழியர்களாகக் கருதி அவர்களை இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் சட்ட விதிகளில் திருத்தங்களை எதிர்பார்த்துள்ளேன். அத்துடன், விளையாட்டு சங்கங்களின் தேர்தலின் போது ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுகின்ற நபர்கள் தமது சொத்து மற்றும் வருமான விபரங்களை சமர்பிப்பதற்கான புதிய நடைமுறையொன்றையும் கொண்டுவரவுள்ளோம்.  

எனினும், அந்த விபரங்களை இரகசியமாகப் பேண வேண்டியிருப்பதால் அந்தப் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேன என அமைச்சர் கூறினார்.

இதேவேளை, கிரிக்கெட் வீரர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அண்மைக்காலமாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற சூதாட்ட விவகாரம் தொடர்பில் வீரர்கள் தமது மனவேதனையை வெளியிட்டுள்ளனர். ஆட்டநிர்ணயம் தொடர்பில் பல ஊடகங்கள் தமது பெயர்களை வெளியிட்டு வருவதாகவும், அதனால் தாம் மிகவும் மனவேதனைக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் தரவரிசையில் அதியுயர் முன்னேற்றம் கண்ட அகில தனன்ஜய

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) வெளியிட்டுள்ள ..

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர், எமது வீரர்கள் யாரும் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடவில்லை என நான் உறுதியாக சொல்கிறேன். இலங்கையின் தற்போது இடம்பெற்று வருகின்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணைகளில் குற்றவாளி யார் என்பது நிரூபணமாகிய பிறகுதான் பெயர்கள் வெளியிடப்படுகின்றது. ஆனால், ஊடகங்கள் அதற்கு முன் வீரர்களின் பெயர்களை வெளியிடுவது அவர்களது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற செயலாகும். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊடகங்கள் அவ்வாறான செய்திகளை இனிமேலும் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன். அதேபோல, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவினர் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட இரண்டு இலங்கை வீரர்களின் பெயர்களை மாத்திரம் தான் வெளியிட்டிருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது முகங்கொடுத்துள்ள ஆட்டநிர்ணய குற்றச்சாட்டுகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தி கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடைய ஊழல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

இதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்புமிக்க அதிகாரியும், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான கமல் பத்மசிறி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா மற்றும் உதவி சொலிசிட்ட ஜெனரால் சுமதி தர்மவர்தன ஆகியோர் இன்றைய தினம் (05) இங்கிலாந்து நோக்கி செல்லவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.   

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<